பெட்ரோல், டீசல் வரியை குறைத்து தாராளம் காட்டிய இந்தியாவின் முதல் மாநிலம் இதுதான்..!!

Written By:

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த இந்தியாவின் முதன் மாநிலம் என்ற சிறப்புபை பெற்றுள்ளது குஜராத்.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

இதுப்பற்றி குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று, எரிபொருட்களுக்கான வரியில் மாற்றம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

மதிப்புக்கூட்டு வரி 4% குறைக்கப்பட்டுள்ள காரணத்தினால், குஜராத்தில் நடப்பு விலையில் இருந்து பெட்ரோல் ரூ.2.93 காசுகளுக்கும், டீசல் ரூ.2.72 காசுகளுக்கும் குறைந்துள்ளன.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இந்த புதிய விலை, குஜராத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

இம்மாத தொடக்கத்தில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் & டீசல் மீதான கலால் வரியில் ரூ.2 காசுகளை குறைத்திருந்தார்.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

பிறகு மாநில அரசுகளை மதிப்புக்கூட்டு வரியில் 5 சதவீதம் வரை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டார்.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

இதுப்பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் பிரதான், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மூலம் அதிகம் பயனடைவது மாநில அரசாங்கங்கள் தான்.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

இதை கருத்தில்கொண்டு, நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்புக்கூட்டு வரியில் 5 % வரை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தார்.

எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைத்த மாநில அரசு..!!

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று, எரிபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரியை குறைந்த முதல் மாநில அரசு என்று பெருமை பெறுகிறது குஜராத் மாநிலம்.

English summary
Read in Tamil: Gujarat Became The First State to Reduce the Var on Petrol and Diesel Rates. Click for Details...
Story first published: Wednesday, October 11, 2017, 11:31 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark