குஜராத்திற்கு மோடி கொடுத்த ’ரோ ரோ’ படகுகளின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு..??
குஜராத்திற்கு மோடி கொடுத்த ’ரோ ரோ’ படகுகளின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு..??
குஜராத்தில் உள்ள கோஹா மற்றும் தஹேஜ் பகுதிகளுக்கு இடையில் படகு போக்குவரத்தை சமீபத்தில் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.

'ரோ-ரோ' எனப்படும் ரோல்-ஆன் ரோல்-ஆஃப் வகை படகு போக்குவரத்தில் பயணிகளுடன் லாரி, பேருந்து உட்பட வாகனங்களையும் ஏற்றி செல்ல முடியும்.

இந்த வகையை சார்ந்த படகைத்தான் தற்போது மோடி குஜராத்தின் கோஹா, தஹேஜ் பகுதிகளுக்கு இடையில் மிதக்கவுட்டுள்ளார்.
குஜராத்தில் இரண்டு வளைகுடா பகுதிகள் உள்ளன. ஒன்று கட்ச் வளைகுடா, மற்றொன்று காம்பெத் வளைகுடா.

இதில் தென்பகுதியில் அமைந்திருக்கும் காம்பெத்தில் சூரத் மற்றும் வதோரா போன்ற முக்கிய நகரங்கள் இருக்கின்றன.
வடபகுதி தஹேச்சில் இருந்து தென்பகுதிக்கு செல்ல தரைவழி போக்குவரத்தை மட்டுமே மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்தனர்.

300 கி.மீ கடந்த செல்ல ஏழு மணி நேரம் ஆகும் இந்த தரை வழி போக்குவரத்தால், அதிக எரிபொருள் செலவு உட்பட பல்வேறு செலவீனங்கள் இருக்கின்றன.

இதை குறைக்கும் நோக்கில் தான் தற்போது வடபகுதியில் உள்ள தஹேச் மற்றும் தென்பகுதியான கோஹாவிற்கு இடையில் ரோரோ படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு ரோரோ படகில் 100 கார், லாரி மற்றும் பேருந்து ஆகிய வாகனங்களுடன் 200 பயணிகளுக்கு மேல் (அவர்களது உடமைகளை சேர்ந்து) ஒரே நேரத்தில் ஏற்றி செல்ல முடியும்.

குஜராத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த படகுகளில் கார், லாரி, பேருந்து, கட்டுமான பணிகளுக்கு தேவையாக இயந்திரங்களை நேரடியாக ஓட்டி சென்று ஏற்றும் வசதி உள்ளது.

அதேபோல படகு செல்லும் கரையை அடைந்த உடன், மீண்டும் அனைத்து ரக வாகனங்களையும் வெளியே கொண்டு வர முடியும்.

குஜராத்தில் ரோரோ படகு போக்குவரத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தரைவழியே தஹேச் முதல் கோஹாவிற்கு செல்ல 7 மணி நேரமாகும்.

சுமார் 310 கி.மீ தொலைவு கொண்ட இந்த தரை வழி போக்குவரத்தை, நீர்வழியில் செய்யும் போது அது 30 கி.மீ தொலைவை மட்டுமே பெறுகிறது.

குறிப்பாக இதனால் 1 மணி நேரத்திற்குள் குஜராத்தில் வடக்கு வளைகுடா பகுதியில் இருந்து தென்பகுதி வளைகுடாவிற்கு செல்ல முடியும்.

நாட்டின் முக்கியமான சேவையாக மாறியுள்ள இது குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பெருமை அளிப்பதாக தனது உரையில் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.

ரூ.614 கோடி மதிப்பில் குஜராத் மாநில அரசும் மற்றும் மத்திய அரசாங்கமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த போக்குவரத்து திட்டம் முதற்கட்டமாக மக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே இயக்கப்படவுள்ளன.

பிறகு இரண்டு மாதங்கள் கழித்து கார் போன்ற சிறிய ரக வாகனங்கள் ஏற்றிச்செல்லப்படும். அதற்கு பிறகு படிப்படியாக பெரிய மற்றும் கனரக வாகனங்கள் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications