தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்க!

தல தோனி ரசிகர்களைக் கவர பிரபல ஆயில் நிறுவனம் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

நடிகர் அஜித்திற்கு அடுத்ததாக 'தல' என்று தமிழர்களால் செல்லமாக அழைக்கப்படும் நபர் எம்எஸ் தோனி. இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லைங்க இந்தியாவையேக் கடந்தும் ரசிக பட்டாளம் இருந்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கின்றநிலையிலும் இவருக்கு ரசிகர்கள் நீடித்து வருகின்றனர்.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

இத்தகைய ஓர் நபர் என்பதனலாயே எம்எஸ் தோனியை சிறப்பிக்கும் விதமாக பிரபல ஆயில் நிறுவனமான கல்ஃப் தரமான ஓர் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், சிறப்பு எடிசன் ஆயில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தோனிக்கு மரியாதைச் செலுத்தும் விதமாகவே இந்த சிறப்பு எடிசன் எஞ்ஜின் ஆயிலை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் இந்தியாவிற்கான அம்பாஸிடரே நமது ஃபேவரிட் விளையாட்டு வீரர் எம்எஸ் தோனி. இதனால் இந்நிறுவனத்தின் பெரும்பாலான விளம்பரங்களில் இவரின் முகமே காட்சியளித்து வருகின்றது. இந்த நிலையிலேயே தனது ஆயில் பாட்டில்களிலும் அவரின் முகம் தென்படும் விதமாக தோனியின் புகைப்படத்தைக் கொண்ட ஆயில்களை விற்பனைச் செய்ய தொடங்கியிருக்கின்றது.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

இந்த பிரத்யேக ஆயில் வரும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே விற்பனைச் செய்ய கல்ஃப் திட்டமிட்டிருக்கின்றது. இதையே தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன. நாடு முழுவதும் உள்ள தனது ஆயில் விற்பனையாளர்கள் மற்றும் குறிப்பிட்ட சில வாகன உதிரிபாக விற்பனையாளர்கள் வாயிலாக இதனை விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

இந்த ஆயில்கள் வாகனத்தின் எஞ்ஜின் திறனை மேம்படுத்த உதவும். குறிப்பாக, பைக்கின் பிக்-அப் மற்றும் சுறுசுறுப்பை மேம்படுத்தக் கூடியது. இந்நிறுவனம் பிரத்யேகமாக மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ஆயில்களை விற்பனைச் செய்து வருகின்றது. தற்போதைய சிறப்பு எடிசன் ஆயிலும் இருசக்கர வாகனங்களுக்கானது மட்டுமே ஆகும்.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

எனவே இந்த இந்திய இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமின்றி தல தோனி ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சிறப்பு எடிசன் என்பதற்கான விலையுயர்வு இன்றியே இது விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தல தோனி ரசிகர்களை கவர ஆயில் உற்பத்தி நிறுவனம் செய்த காரியம்... என்ன தெரிஞ்சா இந்த ஆயிலை வாங்க உடனே புறப்படுவீங்!

அதாவது வழக்கமான ஆயில் கிடைக்கும் விலையிலேயே இந்த எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. எம்எஸ் தோனி ஓர் வாகன பிரியர் ஆவார். இவரிடத்தில் விலையுயர்ந்த வாகனங்களைப் போலவே சில அரிய வகை வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. யமஹா ஆர்டி350 போன்ற பிரத்யேக வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gulf Launches MS Dhoni Tribute Spcial Oli Pack In India. Read In Tamil.
Story first published: Sunday, January 10, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X