ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள்

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று பப்ஜி ரக ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரையிலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பப்ஜி-யும் ஒன்று. ஸ்மார்ட் போனில் மட்டுமே விளையாடக்கூடிய இந்த விளையாட்டிற்கு உலகளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் இந்த விளையாட்டின்மீது தீவிரமான வெறிக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இத்தகையோரைக் கவரும் வகையில் கன்ஸ் அண்ட் ஹோஸஸ் எனும் நிறுவனம் பப்ஜி ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம். இந்த நிறுவனமே கைகளால் பெயிண்ட் செய்த பப்ஜி ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இந்தியாவில் தற்போது பப்ஜி கேமிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இந்த விளையாட்டிற்கும் தற்போதும் இந்தியாவில் பெருமளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையிலேயே பப்ஜி கேமுடைய தீம், துப்பாக்கிகள் மற்றும் வின்னர்-வின்னர் சிக்கன் டின்னர் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஹெல்மெட்டுகளை அது அறிமுகம் செய்துள்ளது.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்கினை வகிக்கக்கூடிய அம்சமாக ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. எனவேதான் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் இந்திய மோட்டார் வாகன சட்டம் அறிவுறுத்துகின்றது.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இதை மீறுவோர்களுக்கு அது அதிகபட்ச தண்டனையாக அபராதம் உள்ளிட்டவற்றை வழங்குகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் ஹெல்மெட்டின் பக்கம் பப்ஜி பிரயர்களைக் கவரும் நோக்கிலும், புதிய ஹெல்மெட் பயன்பாட்டாளர்களை உருவாக்கும் நோக்கில் கன்ஸ் அண்ட் ஹோஸ் நிறுவனம் இந்த ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இதற்காக ஐஸ்எஸ்ஐ மற்றும் டிஓடி தரச் சான்று ஹெல்மெட்டுகளை மட்டுமே அந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. முழு முக ஹெல்மெட் மற்றும் அரை முக ஹெல்மெட் என இரு விதமான ஹெல்மெட்டுகளிலும் பப்ஜி டிசைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹெல்மெட்டையும் விட்டு வைக்காத பப்ஜி! இது மேட்-இன்-இந்தியா பப்ஜி ஹெல்மெட்... அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே...

இதுதவிர, ஹெல்மெட்டின் உட்பகுதியை கழட்டி சுத்தம் செய்யும் வசதி மற்றும் யுவி பாதுகாப்பு திறன் கொண்ட கண்ணாடி உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் இந்த புதிய ஹெல்மெட்டி கன்ஸ் அண்ட் ஹோஸஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த அனைத்து வசதிகளையும் வேகா நிறுவனத்தின் ஜெட் ரக ஹெல்மெட்டுகளிலேயே அது செய்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Guns And Hoses mades PUBG Helmet. Read In Tamil.
Story first published: Tuesday, November 17, 2020, 19:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X