பாலியல் வழக்கில் சிறை சென்ற போலி சாமியார் குர்மீத் ராமின் போர்ஷே காரை காண குவியும் சுற்றுலாவாசிகள்
போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் போர்ஷே காரை காண குவியும் சுற்றுலாவாசிகள்.
பாலியல் வழக்கில் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிறுது நாட்களுக்கு பிறகு மீண்டும் டிரென்டிங்கில் உள்ளார்.

பணத்தில் பாய் விரித்து படுக்கும் அளவிற்கு வசதி படைத்த ராம் ரஹீம் சிங், வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக தன்னுடைய கார்களை தானே டிசைன் செய்துகொள்வார்.

இப்படி பல கார்கள் மீது அலாதியாக இருந்தாலும் போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் தனது போர்ஷே கேயென் ஜிடிஎஸ் கார் மீது தனிப்பாசம் வைத்திருந்தார்.

இப்படி ஒரு கார் இவரிடம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அந்தளவிற்கு தனது போர்ஷே மீது குர்மீத் ராம் ரஹீம் ரகசியம் காத்து வந்தார்.

தற்போது சட்ட அமலாக்க துறை அவரது சொத்துக்களை கைப்பற்றி வருகிறது. அதனால் குர்மீத்தின் போர்ஷே கார் தற்போது ஹரியானாவின் சங்கிரூர் பகுதி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பச்சை நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் இந்த காரை பார்க்க பல சுற்றுலா வாசிகள் சங்கிரூர் காவல்நிலையத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.
Trending On Drivespark:

போர்ஷே போன்ற ஆடம்பர மாடல் கார்களை அப்பகுதியில் வசிக்கும் பலருக்கு பார்த்ததில்லை என்பதால், காவல் நிலையத்தின் முன்பு மக்கள் கூட்டம் கட்டுகடங்காத நிலை ஏற்படுகிறது.
Recommended Video


தவிர சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் பக்தாள் பலர், 'கடவுள் வாகனம்' என்று கூறி போர்ஷே கார் முன்பு அமர்ந்து பூஜைகள் செய்து அதை முத்தமிட்டு வேறு வணங்கி செல்கிறார்களாம்.

போர்ஷேவை ஆச்சர்யமாக பார்க்க வரும் கூட்டத்தை ஒழுங்கப்படுத்தவது சங்கிரூர் போலீசாருக்கு பெரிய சவால் நிறைந்த வேலையாக உள்ளது.

இதனால் காரை வேறு பகுதிக்கோ அல்லது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எதாவது ஒரு இடத்திலோ நிறுத்திவைக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.

போர்ஷேவின் கேயென் ஜிடிஎஸ் மாடல் கார் இந்திய மதிப்பில் ரூ. 1.42 கோடி விலை பெறுகிறது. 5 இருக்கைகள் கொண்ட இந்த எஸ்யூவி கார் சிறந்த செயல்திறன் தரும் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

3.6 லிட்டர் ட்வின் டர்போசார்ஜிடு பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் 434 பிஎச்பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக வழங்கும்.

ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தை எல்லா மாடல்களிலும் பெற்றுள்ள போர்ஷே கெயான் ஜிடிஎஸ் எஸ்யூவி கார், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

எஞ்சின் திறன் மற்றும் டிரைவ்லைன் சிறப்பம்சங்கள் போன்றவை போர்ஷே ஜிடிஎஸ் எஸ்யூவி கார் ஸ்போர்ட்ஸ் திறன் பெற்ற மாடலுக்கு இணையாக கொண்டு செல்கின்றன.

குர்மீத் ராம் ரஹீமின் பச்சை நிற போர்ஷே கெயான் காருக்கு உரிமைக்கோரி சிர்ஸா பகுதியில் வசிக்கும் ஹனி கோயல் என்ற்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், காரை உரிமைக்கோரின் உண்மையான ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இதுவரை நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தனது இறுதி முடிவை எதையும் வெளியிடவில்லை.

அதுவரை சுற்றுலா வாசிகள் மற்றும் போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் பக்தர்களிடமிருந்து போர்ஷே கெயான் ஜிடிஎஸ் காரை காப்பாற்ற தொடர்ந்து சங்கிரூர் பகுதி காவலர்களின் பாதுகாப்பு அவசியமாகிறது.

இருந்தாலும் போர்ஷே காரை வைத்து குர்மீத் ராம் ரஹீமின் பக்தகோடிகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட அதிக வாய்ப்புள்ளதாக சங்கிரூர் காவல்நிலைய இணை கண்காணிப்பாளர் தேவேந்திர் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








