போலி சாமியார் குர்மீத் ராம் சிங்கின் மிரட்சியை தரும் அதிரடி கார் கலெக்‌ஷன்... முழுத் தகவல்கள்..!!

அக்கார்டு காரை புகாட்டி வேரான மாற்றினால் நீங்களும் குர்மீத் ராம் சிங் தான்.

By Azhagar

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங் பற்றி எந்த செய்தி வெளியிட்டாலும் டிரென்டிங், என்ன பேசினாலும் பிரேக்கிங்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

மற்றவர் பார்த்து முகம் சுளிக்கும் அளவிற்கு சாமியார் ராம் ரஹீம் சிங்கின் ஃபேஷன் தேர்வுகள் இருக்கும்.

ஆனால் அவர் பயன்படுத்திய கார்களில் காணப்பட்ட ஃபேஷன் மற்றும் தொழில்நுட்ப திறன் அதற்கும் மேல்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

பணம் என்பது அவருக்கு ஒரு பொருட்டே கிடையாது. தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அது மற்ற யாரிடமும் இருக்கக்கூடாது என நினைப்பவர் ராம் ரஹீம் சிங்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

இந்த குணாதிசியம், அவர் பயன்படுத்திய வாகனங்களில் அதிகம் காணப்பட்டது. படங்களிலும் சரி, நேரிலும் சரி ராம் ரஹீம் சிங் பயன்படுத்திய வாகனங்களின் டிசைன் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடும்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

பணத்தில் பாய் விரித்து படுக்கும் அளவிற்கு வசதி படைத்த ராம் ரஹீம் சிங் வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக தன்னுடைய கார்களை தானே டிசைன் செய்துகொள்வார்.

Recommended Video

Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

மற்ற சாமியார்கள் போலில்லாமல், முற்றிலும் வித்தியாசமானவர் தான் இந்த ராம் ரஹீம் சிங். அவரிடம் இருக்கும் பணத்தை ஒழிவு மறைவின்றி வெளியே காட்டிக்கொள்வார்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

வாகனங்கள் தான் தனக்கான தனி அடையாளம் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர். அதனால் எப்போதும் தான் பயணிக்கும் வாகனங்களில் தனிச்சையான ஆடையாளம் இருக்கவேண்டும் என பார்த்துக்கொள்வார்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

இதற்காக, ஹரியானா மாநிலம் சிர்ஸா என்ற பகுதியில் சுமார் 800 ஏக்கர் கொண்ட தனது ஆசிரமத்தில் ராம் ரஹீம் சிங் வாகனங்களின் உருவாக்க பணிகளுக்காக பெரிய பட்டறை ஒன்றை வைத்துள்ளார்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

இந்தியாவில் வாகன தயாரிப்பில் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் அடிக்கடி இந்த ஆசிரமத்திற்கு விசிட் அடிப்பது வழக்கம்.

அவர்களது ஆலோசனையின் பேரில் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் ராம் ரஹீம் சிங்கிற்கான வாகனங்களை பிரத்யேகமாக டிசைன் செய்வார்கள்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

செடான், ப்ரீமியம் செடான், எஸ்.யூ.வி. ஆடம்பர செடான் உட்பட பல சீறும் திறன்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார்கள் பல அவரது சிர்ஸா ஆசிரமத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

அந்த கலெக்‌ஷன்களை பார்க்கும் போது, இவர் தன் பேரில் கார்களை தயாரித்து அதை, அடுத்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துவிடுவாரோ என நினைத்து நம்மை மலைக்க செய்து விடும்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

அந்த கார்களுக்கு இணையாக கூடவே, சாமியார் ராம் ரஹீம் சிங்கின் கஸ்டமைஸ் மற்றும் ரீமாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களுக்கும் அந்த ஆசிரமத்தில் அளவே இல்லை.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

இத்தனை கார்களுக்கு மத்தியில் குர்மீத் ராம் சிங் அதிகமாக பயன்படுத்துவதும், அவருக்கு பிடித்த கார் தான் 'கடவுளின் ரதம்'.

'Chariot of God' என்று அவர் பெயரிட்டு இருக்கும் இந்த கார், புகாட்டி வேரான் காரின் வெளித்தோற்றத்தை காப்பி அடித்து உருவாக்கப்பட்டது.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

ஆனால் உண்மையில் கடவுளின் ரதம் ஹோண்டாவின் அக்கார்ட்டு மாடல் கார் தான். வேரான் காரை பார்த்ததும் பிடித்துப்போக,

தனது ஷெட்டில் நின்றிருந்த ஹோண்டா அக்கார்டு காரை தன் பட்டறையில், புகாட்டி வேரான் தோற்றத்திற்கு மாற்றிவிட்டார்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

அக்கார்டு வி6 காரின் கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் எஞ்சினை மட்டும் அப்படியே வைத்துவிட்டு, வெளிப்புற தோற்றத்தில் மாடிஃபிகேஷன், ரீமாடிஃபிகேஷன் போன்ற இத்யாதிகளை செய்து புகாட்டியாக மாற்றிவிட்டார்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

பெரும்பாலும் தனது சொற்பொழிவுகளை கடவுளின் ரதத்தில் இருந்துதான் சாமியார் குர்மீத் ராம் சிங் ஆற்றுவார்.

அதற்காக காரின் முகப்பு பகுதியில் இதயம் வடிவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டசின்ன ஒலிபெருக்கியும் உள்ளது.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

காராக இல்லாமல், பைக்காகவும் இல்லாமல் பியோஜியோ எம்.பி3 என்ற ஸ்கூட்டரை இத்தாலி நாட்டு நிறுவனம் தயாரித்தது.

இதன் மேல் காதல் ஏற்பட அதற்கு சாமியார் குர்மீத் ராம் சிங் செய்தது இந்திய ஆட்டோமொபைல் துறையையே டென்ஷன் ஆக்கியது.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

புத்தம் புதிய கரிஷ்மா பைக்கை ஒன்றை வாங்கி அதை அன்றே தனது பணியாளர்களிடம் அவர் பியோஜியோ எம்.பி3 தோற்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

அந்த புதிய கரிஷ்மா பைக், இருக்கை, ஸ்டீயர்ங் போன்ற தேவைகளோடு பியோஜியோ எம்.பி3 ஸ்கூட்டராக மாற்றப்பட்டது. கரிஷ்மா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

இந்த மாடல் ஸ்கூட்டர் முலம் ஒரே ஒரு முறை தான் குர்மீத் ராம் சிங் போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. பிறகு அது அவரது ஷெட்டில் நிறுத்தப்பட்டு, பிறகு யாரோ ஒரு கிராமத்து ஆளுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

இந்தியாவின் ஆன்மீக பயணத்தில் தனித்து தெரியவேண்டும் என்று நினைத்து வாழந்த குர்மீத் ராம் சிங், கடைசியில் பெரும்பாலான சாமியார்கள் போல பாலியல் வழக்கில் கைதாகி போலி சாமியராக மாறிப்போனார்.

குர்மீத் ராம் சிங் அதிரடியான கார் கலெக்‌ஷன்..!!

ஆனால் ஆன்மீகம் என்ற பெயரில் இவர் சம்பாதித்த பணம், சொத்து, வங்கிக்கணக்கு, கார்கள் ஆகியவற்றை அரசு என்ன செய்யப்போகிறது என்பது தான் இனி நாம் உற்று பார்க்க வேண்டிய விஷயம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2017, 13:40 [IST]
English summary
Read in Tami: Sant Gurmeet Ram Rahim Singh's Wacky Car Collection. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+