இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க! ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்! எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!

குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமத்தை முற்றிலுமாக முடக்க இருப்பதாக குறிப்பிட்ட நகரத்தின் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கு, என்ன நடிவடிக்கை எடுக்கப்படும் என்கிற தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

போக்குவரத்து விதிமீறல்கள், இதுவே பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணம் ஆகும். எனவேதான் இதற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் தொடங்கியிருக்கின்றனர். முன்பைவிட தற்போது விதிமீறல் வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் போக்குவரத்து காவல்துறை அதி தீவிரம் காட்டி வருகின்றது.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றது. குறிப்பிட்ட நகரத்தின் போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறலில் வாகன ஓட்டிகள் ஈடுபடும்பட்சத்தில் உடனடியாக ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

ஹரியானா மாநிலம், குருகிராம் நகர காவல்துறையே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. வாகன ஓட்டிகள் தவறான பாதையில் வாகனங்களை இயக்கும்பட்சத்திலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றது. ஓட்டுநர் உரிமம் ரத்து நடவடிக்கை தற்காலிகமானது அல்ல என்பது கவனிக்க வேண்டியது. இது நிரந்தர ரத்து நடவடிக்கை ஆகும்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

இந்த தகவலை நகரத்தின் துணை காவல் ஆணையர் பிரீத் பால் சிங் நேற்று (புதன்கிழமை) உறுதி செய்தார். இதுகுறித்த அவர் கூறியதாவது, "நகரத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக தவறான பாதையில் வலம் வருபவர்கள் அதிகரித்திருக்கின்றனர். இவர்களைக் களையெடுக்கும் விதமாக ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் அபராதங்களை போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

மேலும், "விதிமீறல் முதல் முறையாக செய்யும்பட்சத்தில் அபராதமும், தொடர்ச்சியாக செய்யும்பட்சத்தில் அந்த வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் முழுமையாக முடக்கப்படும்" என ஏஎன்ஐ செய்தி தளத்திடம் அவர் தெரிவித்தார். இவர்களுக்கு மீண்டும் ஓட்டுநர் உரிமம் வழங்காதப்படி அதி-தீவிர நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

காவல்துறையின் இந்த அதிரடி அறிவிப்பு நகர வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல் வாதிகள் மத்தியில் இந்த தகவல் பெரும் கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது. அதேசமயம், இனி எந்தவொரு தொல்லையுமின்றி, குறிப்பாக இடையூறுமின்றி வாகனங்களில் பயணிக்க முடியும் என தினசரி வாகன பயனர்கள் நிம்மதி பெருமூச்சு விட தொங்கியிருக்கின்றனர்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

நாட்டில் அரங்கேறும் அதிகப்படியான விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிவேகம், சிக்னல்களை மீறுதல் மற்றும் ட்ரிங்க் அண்ட் டிரைவ் ஆகிய விதிமீறல்களைக் காட்டிலும் மிக அதிகளவில் செய்யப்படும் விதிமீறலாக தவறான பாதையில் வாகன வலம் வருவது இருக்கின்றது. எனவேதான் முதலில் இந்த விதிமீறலுக்கு முற்று புள்ளி வைக்க குருகிராம் நகர போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

அதேசமயம், பிற விதிமீறல்களுக்கும் முற்று புள்ளி வைக்கின்ற நடவடிக்கையில் அந்நகர காவல்துறை களமிறங்கியிருக்கின்றது. கடந்த 2019ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி 49,671 பேருக்கு நகர போலீஸார் அபராத செல்லாண்களை வழங்கியிருக்கின்றனர். இதேபோன்று 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 39,765 பேருக்கு அபராத செல்லாண்களை வழங்கியிருக்கின்றனர்.

இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க... ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்... எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!!

ஆகையால், பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த நிலையிலும் வாகன ஓட்டிகள் விதிமீறி பயணித்தது தெரிய வருகின்றது. எனவே, எதிர்காலத்திலும் இம்மாதிரியான விதிமீறல்கள் அதிகம் நடைபெறக் கூடாது என்பதற்காகவே அதிரடி நடவடிக்கைக் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gurugram Police Warns Permanent License Termination For Wrong Side Driving. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X