புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, ஆல்கஹால் பிரீத் அனலைசர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு காவல் துறையினர் பதில் அளித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக வசூலிக்கப்பட்ட அபராத தொகை 55 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. நடப்பாண்டு டிசம்பர் 14ம் தேதி வரை, 2,16,199 சலான்களை குர்கான் போக்குவரத்து காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

குடிபோதையில் வாகனங்களை இயக்கியது, சிக்னல்களில் சிகப்பு விளக்குகளை மீறி சென்றது, ராங் சைடில் வாகனங்களை ஓட்டியது, தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்தியது, தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியது, நோ-எண்ட்ரி ஆகிய காரணங்களுக்காக இந்த சலான்கள் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

கடந்த 2019ம் ஆண்டு குடிபோதையில் வாகனங்களை இயக்கியதற்காக 4,067 சலான்களை குர்கான் காவல் துறையினர் வழங்கியிருந்தனர். ஆனால் நடப்பாண்டு இந்த காரணத்திற்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை வெறும் 447 மட்டுமே. கொரோனா பிரச்னை காரணமாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான சோதனைகள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு ஆகிய காரணங்களால்தான், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக வசூலிக்கப்படும் அபராத தொகை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முழுமையான ஊரடங்கை கொண்டு வந்தது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

இதன் காரணமாக வாகனங்களின் போக்குவரத்து முற்றிலுமாக குறைந்தது. அத்துடன் குர்கானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான சோதனைகளையும் நாங்கள் நிறுத்தி விட்டோம்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதால், ஆல்கஹால் பிரீத் அனலைசர் இயந்திரங்களை (Alcohol Breath Analyser Machine) பயன்படுத்துவதை போக்குவரத்து காவல் துறையினர் தவிர்த்து விட்டனர்'' என்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஆங்கில புத்தாண்டு நெருங்கி கொண்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன் காரணமாக ஏராளமாக விபத்துக்கள் நடைபெறும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, சோதனைகளை காவல் துறையினர் கடுமையாக்குவார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

ஆனால் நடப்பாண்டு கொரோனா வைரஸ் பிரச்னை இருப்பதால், ஆல்கஹால் பிரீத் அனலைசர் இயந்திரங்களை காவல் துறையினர் பயன்படுத்துவார்களா? என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து குர்கான் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணிப்பதற்கு காவல் துறையினர் பணியில் ஈடுபடுவார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பிரீத் அனலைசர் இயந்திரம் பயன்படுத்தப்படுமா? காவல் துறை சொன்ன பதில் இதுதான்...

ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, ஆல்கஹால் பிரீத் அனலைசர் இயந்திரங்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்'' என்றனர். எனினும் ஆல்கஹால் பிரீத் அனலைசர் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் காவல் துறையினர் என்ன முடிவு செய்யப்போகின்றனர்? என்பது உறுதியாக தெரியவில்லை.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gurugram Records 55 Percent Dip In Traffic Fines - Here Is Why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X