தானம் குடுத்த வண்டி எல்லாம் செம ஹிட்! இப்ப 3 வண்டியை கோவிலுக்கு வழங்கிய டிவிஎஸ்!
மக்கள் பலர் கோவில்களுக்கு தானம், நன்கொடை குடுப்பது வழக்கமான விஷயம் தான். அவர்கள் வேண்டும் நிறைவேற வேண்டியோ, அல்லது நிறைவேறினாலோ இப்டியா விஷயங்களை செய்வார்கள். ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்பை இப்படி கோவில்களுககு வழங்கும் சம்பவமும் நடந்துள்ளது. இப்படியாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்களை வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் குருவாயூர் கோவிலுக்க தனது புதிய என்டார்க் 150, ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கிங் கார்கோ இவி ஆகிய கார்களை குருவாயூர் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் 3 வாகனங்களும் கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனத்திற்கு கோவில் பூசாரி வந்து சடங்குகளை செய்கிறது. அதன் பிறகு டிவிஎ் நிறுவனத்திலிருந்து வந்த ஒர வர் சாவிகளை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கிறார். இந்த வீடியோவில் கோவில் மற்றும் அங்குள்ள கூட்டத்தின் காட்சிகள் இடம் பெறுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 150, கிங் கார்கோ இவி, ஆர்பிட்டர் ஆகிய வாகனங்களை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எலெக்ட்ரிக் 3 வீலரான கிங் கார்ககோ இவி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி விற்பனைக்காக வந்தது. இது லாஸ்ட் மைல் டெலிவரிக்கான வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் சுமார் 6.6 அடி நீளம் கொண்ட சரக்கு ஏற்றி செல்லும் வாகனமாக இருகு்கிறது. இந்த வாகனதம் 3420 மிமீ டர்னிங் ரேடியன் கொண்டது. இந்த வாகனம் அதிகபட்சம் 60 கி.மீ வேகத்தில் பயணிக்கூடியது. இந்த வாகனம் 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ வாரண்டியை கொண்டதாக இருக்கிறது. இந்த வாகனம் 500 மிமீ தண்ணீரையும் அசால்டாக கடந்து செல்லும்.
இந்த வாகனத்தின் பேட்டரியை வெறும் 3 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து செல்ல முடியும். இந்த வாகனத்தில் 200 மிமீ டிரம் பிரேக் உள்ளது.இந்த வாகனத்தின் விலை வெறும் ரூ3.85 லட்சம் தான்.
அடுத்ததாக இந்நிறுனவம் ஆர்பிட்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தானமாக வழங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்தஸ்கூட்டர் ரூ99,900 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், 34 லிட்டர் சீட்டிற்கு அடி பகுதியில் ஸ்டோரேஜ் வசதி ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 845 மிமீ நீளமான சீட் உள்ளது. இதில் எல்சிடி ஸ்கிரீன், மொபைல் கனெக்டிவிட்டி, 3.1kwH பேட்டரிபேக் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த வாகனம் முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
அடுத்ததாக டிவிஎஸ் என்டார்க் 150 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டர் கடந்த 4ம் தேதி தான் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனம் ரூ1.19 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் ஸ்டாண்டர்டு மற்றும் டிஎஃப்டி கிளஸ்டர் ஆகிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் மல்டி பாய்ண்ட் புரோஜெக்டர் ஹெட்லைட், புதிய டெயில் லைட் கிஸ்டர், ஷார்ப்பான ஏப்ரான், நேக்கட் பைக் லுக் ஹேண்டில் பார் ஆகிய வடிவமைப்புகளும், டர்போ ப்ளூ, ஸ்டெல்த் சில்வர், ரேஸிங் ரெட், நிட்ரோ கிரீன் ஆகிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் குருவாயூர் கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த ஏரப்லர மாதம் இந்நிறுவனம் 5 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கியது. கடந்த 2006ம் ஆண்டு டிவிஎஸ் அப்பாச்சி 150 பைக்குகளை வழங்கியது. இப்படியாக நன்கொடை வழங்கப்பட்ட வாகனங்கள் எல்லாம் விற்பனையில் அமோக வளர்ச்சியை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








