கேரளாவில் 18 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன கார் பேன்சி நம்பர்!

Written By:

கார்கள் வைத்திருப்பதே அரிதாக இருந்த காலகட்டம் எல்லாம் தற்போது மலையேறிவிட்டது. அதிக எண்ணிக்கையிலான கார்களால் சாலைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. தங்களாது கார்கள் தனித்து அடையாளம் காணப்படவேண்டும் என்பதில் கார் உரிமையாளர்கள் பெரும் கவனம் செலுத்துகின்ரனர். இதன் காரணமாக வாகனங்களுக்கு பேன்சி எண் வாங்குவதில் அதிக செலவு செய்யவும் தயாராகிவிட்டனர்.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

வாகனத்திற்கு பேன்சி நம்பர் வைத்திருப்பது சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலாக மாறியிருக்கும் நிலையில், சமீபகாலமாக இந்த மோகம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கேரளளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் கார் பதிவு எண்ணுக்காக ஒருவர் 18 லட்ச ரூபாயை செலவழித்துள்ள சம்பவம் ஆச்சரியத்ததை ஏற்படுத்தியுள்ளது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

திருவனந்தபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பேன்சி எண்ணுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ‘கேஎல் 01 சிபி 1' என்ற பேன்சி எண் 18 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

கேஎஸ் பாலகோபால் என்ற மருந்து விற்பனை தொழில் செய்பவர் தன்னுடைய 1.8 கோடி மதிப்பிலான டொயொட்டா லேண்ட் க்ரூசர் காருக்காக இந்த பேன்சி எண்ணை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

பாலகோபால் வாங்கியுள்ள பேன்சி வாகன பதிவு எண் விலையில், ஒரு நல்ல எஸ்யுவி காரையே வாங்கியிருக்கலாம். எனினும் 1 லட்ச ரூபாய் ஆரம்ப விலை நிர்னயிக்கப்பட்ட ‘கேஎல் 01 சிபி 1' என்ற இந்த எண்ணுக்காக 18 லட்ச ரூபாயை செலவழித்துள்ளார் இவர்.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

கடந்த ஆண்டு திருச்சூரில் ‘கேஎல் 08 பிஎல் 1' என்ற கார் பதிவு எண் ரூ.16,15,000 லட்ச ரூபாய்க்கு விலை போனதே அதிக விலைக்கு ஏலம் போன பேன்சி எண் என்ற சாதனையாக இருந்து வந்தது அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

கடந்த ஆண்டு திருச்சூரில் ‘கேஎல் 08 பிஎல் 1' என்ற கார் பதிவு எண் ரூ.16,15,000 லட்ச ரூபாய்க்கு விலை போனதே அதிக விலைக்கு ஏலம் போன பேன்சி எண் என்ற சாதனையாக இருந்து வந்தது அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

கேரளாவில் புதிய சாதனைபடைத்துள்ள இந்த ஏலத்தின் மூலம் திருவனந்தபுரம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு 24,93,500 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏலத்தில் ‘கேஎல் 01 சிபி 9' என்ற எண் ரூ. 1,15,000 க்கும், ‘கேஎல் 01 சிஏ 9999' என்ற எண் இரண்டு லட்ச ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

கேரள போக்குவரத்து துறை துணை ஆனையர் சி.கே. அசோகன் மற்றும் உதவி ஆணையர் பத்மகுமார் ஆகியோர் மேற்பார்வையில் இந்த ஏலம் நடைபெற்றது. முறைகேடுகளைத் தடுக்க இந்த ஏல நிகழ்வு முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

கடந்த ஆண்டு அதிகபட்சமாக கேஎல் 01 பிஎக்ஸ் என்ற எண் ரூ.10 லட்சத்துக்கும் கேஎல் 01 பிஒய் ரூ.7.5 லட்சத்திற்கும் விலை போயுள்ளன. வருடா வருடம் அதிக விலைக்கு பேன்சி எண்கள் ஏலம் எடுக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேன்சி பதிவு எண் ஏலத்தில் புதிய சாதனை!

டொயோட்டா லேண்ட் க்ரூசர் காருக்காக ‘கேஎல் 01 சிபி 1' என்ற எண்ணை அதிக விலைக்கு ஏலம் எடுத்த கேஎஸ் பாலகோபால் திருவனந்தபுரத்தின் கவுடியார் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தேவி பார்மாசூடிகல்ஸ் என்ற மருந்து விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

English summary
A guy in Thiruvananthapuram spent a whopping Rs 18 lakh for a fancy vehicle registration number. The Thiruvananthapuram RTO had auctioned the ancy number with a base price of Rs 1 lakh.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark