மொத்த மாநிலத்துக்கே தண்ணி காட்டும் குடும்பம்... வாங்கி இருக்கும் காரின் விலையை கேட்டால் வாயை பொளப்பீங்க!

பி.எம்.டபிள்யூ (BMW), உலகளவில் பிரபலமான சொகுசு கார் நிறுவனம். ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனத்தின் கீழ்தான் மினி (MINI) நிறுவனம் செயல்படுகிறது. பெயருக்கேற்ப, மினி பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்கள் யாவும் அளவில் சிறியவை ஆகும். இருப்பினும், மினி கார்களின் விலைகள் பல இலட்ச ரூபாய்களாக உள்ளன. இதனாலேயே அளவில் சிறிய கார்களாக இருப்பினும், மினி கார்களை பணக்காரர்கள் மட்டுமே வாங்குகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு செல்வந்தர் மினி நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

பிஎம்டபிள்யூ கார்களை விட விலை குறைவானவை என்றாலும், மினி கார்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. நம் நாட்டில் மினி கார்களை அதிகம் வாங்குபவர்கள் யாரென்று பார்த்தால், மலையாளத்தவர்களாகவே உள்ளனர். மலையாள சினிமா பிரபலங்களை தாண்டி, சமீப காலமாக கேரளாவை சேர்ந்த பணக்காரர்களும் மினி கார்களை அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

h2o care md buys car

மலையாள டிவி சீரியல் நடிகை அமிதா ஜோபின் (TV Serial Actress Amitha Jobin) புதியதாக மினி கண்ட்ரீமேன் இ (Countryman E) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கியதை சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த நிலையில், கேரள தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்காரியா (George Scaria) புதியதாக மினி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கேரளா மாநிலம் முழுவதும் செயல்படும் நீர் சுத்திகரிப்பு நிலையமான எச்2ஓ கேர் (H2O Care)-இன் நிர்வாக இயக்குனர் தான் ஜார்ஜ் ஸ்காரியா ஆவார். கேரளாவில் மட்டுமின்றி, சில வெளிநாடுகளிலும் மற்ற நீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உடன் இணைந்து செயல்படும் எச்2ஓ கேரின் எம்டி ஜார்ஜ் ஸ்காரியா புதியதாக வாங்கி இருப்பது, மினி நிறுவனத்தின் கூப்பர் எஸ் (Cooper S) காரை ஆகும்.

h2o care md buys car

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மினி கார் ஷோரூம் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிட்டுள்ள வீடியோவில், தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்காரியா குடும்பத்துடன் ஷோரூமுக்கு வந்து பிராண்ட்-நியூ மினி கூப்பர் எஸ் காரை டெலிவிரி பெறுவதை காணலாம். எச்2ஓ கேரின் சிஇஓ ஜார்ஜ் ஸ்காரியா மினி கூப்பர் எஸ் காரை மிட் நைட் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார்.

இது இல்லாமல், இன்னும் 9 விதமான கலர் ஆப்ஷன்களில் மினி கூப்பர் எஸ் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மினி கூப்பர் எஸ் மட்டுமின்றி, கூப்பர் ஜே.சி.டபிள்யூ (JCW) காரும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மினி கூப்பர் எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.44.90 லட்சம் என இருக்கும் நிலையில், கூப்பர் ஜேசிடபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.55.90 லட்சம் ஆகும்.

h2o care md buys car

மினி கூப்பர் எஸ் காரில் 2 லிட்டர், 4-சிலிண்டர், இன்லைன்-4 வால்வு/சிலிண்டர், DOHC என்ஜின் இணைக்கப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த கார் மணிக்கு 100kmph வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் எட்டிவிட கூடியது. இத்தகைய காரை கருப்பு நிறத்தில் தனது குடும்பத்துக்கு ஏற்ப மிகவும் காம்பெக்ட்டான உடலமைப்பில் தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்காரியா வாங்கியுள்ளார். கேரளாவின், ஏற்ற இறக்கமான மற்றும் குறுகலான சாலைகளுக்கு மினி கூப்பர் எஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 8:00 [IST]
English summary
H2o care water purification company owner buys mini cooper s
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X