பாதி பிரிட்டிஷ்காரர்களுக்கு கார்தான் பெட்ரூமாம்: புட்டு வைத்த சர்வே

காரில் செக்ஸ்... இதனை அடிப்படையாகக் கொண்டு இங்கிலாந்தை சேர்ந்த கார் மறு தயாரிப்பு நிறுவனமான பிபிஏ ரேமன் அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், பல சுவாரஸ்ய ரகசிய தகவல்களும் உடைந்தன.

ஆய்வில் கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒருசிலவை தான் நம்ம செய்தியின் பிரதான மேட்டர். அதாவது, ஆய்வில் கலந்து கொண்ட 2,018 ஆண்கள் மற்றும் பெண்களில், காரில் செக்ஸ் வைத்த அனுபவம் உண்டா? என்ற பிரதான கேள்விக்கு 49 சதவீதத்தினர் 'ஆம்' என்று தலையாட்டியுள்ளனர். அதுவும் காம்பெக்ட் கார்தான் அவர்களின் ஃபேவரிட்டாக தெரிவித்துள்ளனர். இன்னும் பல சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஜோலிக்கு முன் ஜாலி

ஜோலிக்கு முன் ஜாலி

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 18 வயது முதல் 34 வயதுடையவர்களில் 38 சதவீதத்தினர் கேள்விக்கு ஆமாம் போட்டுள்ளனர். 35 வயது முதல் 55 வயதுடையவர்களில் 59 சதவீதத்தினர் காரில் செக்ஸ் அனுபவம் உண்டு போட்டு உடைத்துள்ளனர்.

 ஓடும் காரிலும் ஷோ

ஓடும் காரிலும் ஷோ

சிலருக்கு ஓடும் காரில் பலானது பண்ணியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். நல்லவேளையாக, 3 சதவீதத்தினர் மட்டுமே ஓடும் கார் அனுபவத்தை பற்றி ஒப்புவித்துள்ளனர்.

கார் பார்க்....

கார் பார்க்....

சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடம்தான் ரொம்ப வசதியாக இருக்குமாம். ஆய்வில் பங்கேற்றவர்களில் 37 சதவீதத்தினர், இயற்கை எழில் கொஞ்சும் தனிமையான இடங்களிலும், 29 சதவீதத்தினர் கார் பார்க்கிங்கிலும், 22 சதவீதத்தினர் சாலை ஓரமாகவும் செக்ஸ் வைத்துக்கொண்டதாக கூறியிருக்கின்றனர்.

 எந்த கார் சவுகரியம்

எந்த கார் சவுகரியம்

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்த கார் மாடல்களில் முன்னிலை பெற்றுள்ளவை காம்பெக்ட் கார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான். அது எந்தெந்த கார் மாடல் என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 29 சதவீதத்தினர் ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் காரில் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது, பெரும்பான்மையானோர் இந்த காரை தெரிவித்ததால், ஆய்வில் முதலிடத்தை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

27 சதவீதத்தினர் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரை தெரிவித்துள்ளனர்.

வாக்ஸ்ஹால் கார்ஸா

வாக்ஸ்ஹால் கார்ஸா

23 சதவீதத்தினர் வாக்ஸ்ஹால் கார்ஸா காரை தெரிவித்துள்ளனர்.

மினியில் மேக்ஸிமம் வசதி

மினியில் மேக்ஸிமம் வசதி

21 சதவீதத்தினர் மினி காரை தெரிவித்துள்ளனர். ரொம்ப காஸ்ட்லியான விஷயமா இருக்கும்போல...

ரெனோ கிலியோ

ரெனோ கிலியோ

18 சதவீதத்தினர் ரெனோ கிலியோ ஹேட்ச்பேக் காரை ஃபேவரிட் பெட்ரூமாக கூறியிருக்கின்றனர்.

பீஜோ 205

பீஜோ 205

15 சதவீதத்தினர் இந்த பிரெஞ்ச் தயாரிப்பை கூறியிருக்கின்றனர்.

ஃபோர்டு எஸ்கார்ட்

ஃபோர்டு எஸ்கார்ட்

11 சதவீதத்தினர் ஃபோர்டு எஸ்கார்ட் சிறந்ததாக இருந்ததாக கூறியிருக்கின்றனர்.

வால்வோ வி70

வால்வோ வி70

ஓடும் காரில் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்த அந்த 3 சதவீதத்தினரில் பெரும்பாலானோரின் ஃபேவரிட்டாக வால்வோ வி70 குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் 8 சதவீத்தினர் வால்வோ காரை குறிப்பிட்டுள்ளனர்.

 நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

5 சதவீதத்தினர் நிசான் மைக்ராவை குறிப்பிட்டுள்ளனர்.

வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா

வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா

5 சதவீதத்தினர் வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா காரை டெம்பரவரி பெட்ரூமாக பயன்படுத்தியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2013, 21:20 [IST]
English summary
A recent survey conducted by British car remanufacturer BBA Reman has found that 49 percent of Britons have got intimate in a car at least once in their life. The survey has also shed some light on a few interesting facts. One such fact is, most of the cars named in the survey are compact cars. Not what one would expect.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+