வாகன மாசு கட்டுப்பாட்டில் பெரும் முறைகேடு; நாட்டின் ஒட்டு மொத்த மாசின் பாதி வாகனத்தால் ஏற்பட்டதாம்
பஞ்சாப் மாநிலத்தில் மாசு கட்டுபாட்டு வாரியம் நடத்திய சோதனையில் 130 மாசு கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையத்தில் முறைகேடு நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாசில் பாதிக்கு மேல் வா
பஞ்சாப் மாநிலத்தில் மாசு கட்டுபாட்டு வாரியம் நடத்திய சோதனையில் 130 மாசு கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையத்தில் முறைகேடு நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாசில் பாதிக்கு மேல் வாகனத்தால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 400 வாகன புகை உமிழ்வு கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையங்களில் பல ஒழுங்காக பணியாற்றுவதில்லை அங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது. மேலும் பலர் வாகன புகை உமிழ்வு சான்றிதழ் வைத்திருக்கிறனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படும் காற்று மாசின் அளவு கட்டுக்குள் வரவில்லை.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டியாலாவை சேர்ந்த ஒருவர் விமானத்திற்கு இரண்டு இடங்களில் புகை உமிழ்வு சான்றிதழ்களை வாங்கினார். இதை அவர் அதிகாரபூர்வமாக வெளிட்டார். அதன் பின்பு அந்த இரண்டு மையங்களுக்கும் மூடப்பட்டது. அந்த சமயங்களில் இந்த விவகாரம் அதிகமாக பேசப்பட்டாலும் பெரிய அளவில் மற்ற மையங்கள் எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில் பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40 குழுக்களை அமைத்தது. அவர்களை வைத்து 250 புகை உமிழ்வு கண்காணிப்பு மையங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் 130 மையங்கள் விதிகளின் படி செயல்படவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து அந்த குழுக்களின் தலைமை அதிகாரி கூறுகையில் :"பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மாசிற்கு வாகன புகையும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அதன் காரணமாக தான் இந்த சோதனை நடத்தினோம். அதில் 130 மையங்கள் விதிமுறைகளின் படி செயல்படாதது தெரியவந்தது.

சில மையங்களில் புகை உமிழ்வு சோதனைகளை செய்யாமலேயே சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் தான் நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, மற்றும் மற்ற மாசுகளுக்கு வாகனங்கள் வெளியிடும் புகைகள் தான் பாதி மாசுவிற்கு காரணம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த மையங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன் மூலம் ஒரே சர்வரில் அவர்கள் தகவல்கள் பதிவு செய்யப்படும். அதன் மூலம் முறைகேடுகளின பெரும்பகுதியை நாம் போக்கிவிடமுடியும் என கருதுகிறோம்.

மேலும் சான்றிதழ் வழங்கப்படும் வாகன ஓனரின் மொபைல் எண்ணும் பதிவு செய்யப்படும் அதன் மூலம் சான்றிதழ் காலாவதியாகும் நாளுக்கு முன்பாக எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டல் செய்யப்படும்.

மேலும் இந்த சிஸ்டத்தால் தற்போது எத்தனை வாகனங்கள் புகை உமிழ்வு சான்றிதழ் வாங்காமல் இருக்கிறது, அந்த வாகனங்கள் எண்கள் என்ன யாருடையது என் எல்லா தகவல்களையும் விரல் நுனியில் எடுத்து விடலாம். " என கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








