17 நாளில் வசூலான ரூ106 கோடி! மாநில முதல்வரே டிராபிக் ஃபைன் கட்டிட்டாரு! 3 வாரங்களில் நடந்த மேஜிக்!
நீண்ட காலமாக டிராஃபிக் அபராதங்களை செலுத்தாமல் இருந்த வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதத்தை வசூலிக்க கர்நாடக மாநிலத்தில் அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ106 கோடி வசூலாகி விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் கர்நாடக முழுவதும் பிரபலமாகி மக்களே முன்வந்து அபராத தொகை கட்டியதால் இவ்வளவு வசூலானதாக தெரிகிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறினால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது வாகன பதிவெண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இப்படியாக ஏகப்பட்ட அபராத செல்லான்கள் கட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 15 வரை அம்மாநிலத்தில் அபராத செல்லான்கள் விதிக்கப்பட்ட வாகனங்கள் 50 சதவீத தள்ளுபடியில் அபராதங்களை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக ஒருவருக்கு ரூ1000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அவர் ரூ500 செலுத்தினாலே அபராதம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பெங்களூரு மக்கள் மத்தியில்நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த தள்ளுபடி காலத்தில் மட்டும் 50 சதவீத அபராத தொகையாக ரூ106 கோடி வசூலாகியுள்ளது. அதாவது ரூ212 கோடி நிலுவையில் இருந்த அபராத செல்லான்களுக்கு அபராத தொகை வசூலாகியுள்ளது. இதனால் சுமார் 38 லட்சம் அபராத செல்லான்கள் மீதான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசு நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் பெங்களூருவில் தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 17 நாட்களில் பெங்களூருவில் மட்டும் ரூ54.3 கோடி வசூலாகியுள்ளது. இது 1.94 லட்ச அபராத செல்லான்களுக்காக வசூல் செய்யப்பட்ட தொகை ஆகுமு். அதாவது ஒரு நாளுக்க சராசரியாக ரூ5.41 கோடி வசூலாகியுள்ளது.
அம்மாநிலத்தில் இப்படியாக 50 சதவீத தள்ளுபடியை வழங்குவது இது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன்னர் கடந்த 2023ம் ஆண்டு இது போன்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது வெறும் ரூ5.6 கோடி தான் வசூலாகியிருந்தது.தற்போது இந்த தள்ளுபடி குறித்த வழிப்புணர்வு, அதை செலுத்துவதற்கு சுலபமான வழிகள், 50 சதவீதம் என்ற அதிக தள்ளுபடி வழங்கியது என தற்போது நல்ல வரவேற்பு கிடைத்ததற்கு காரணங்கள் உள்ளன.

இந்த அபராத தொகையை தள்ளுபடியில் வசூலிக்க பல்வேறு யுக்திகளை அந்த அரசு கையாண்டது. மக்கள் கர்நாடகா போலீஸ் ஆப், BTP ASTraM ஆப், கர்நாடகா ஒன், பெங்களூரு ஒன், தனித்துவமான வாக்கிங் சென்டர்கள் உள்ளிட்டவசதிகள் மூலம் அபராத தொகைகள் வசூலிக்கப்பட்டனர். இதில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகன தநம்பர் அல்லது செல்போன் நம்பரை வழங்கி நிலுவையில் இருக்கும் செல்லான்களை தெரிந்து கொள்ள முடியும்.
உடனடியாக அதை செலுத்த முடிவும், இதில் அனைத்துமே ஆட்டோமேட் செய்யப்பட்டுள்ளுது. இதனால் ஒரு சில நொடிகளில் அபராத தொகையை செலுத்த விட முடியும். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அபராத செல்லான்களுக்கு கூட பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை டிஜிட்டல் முறையில் தான் பலர் செலுத்தியுள்ளனர்.
இதில் சாதாரண மக்கள் மட்டுமல்ல அம்மாநில முதல்வர் சித்தராமையா கூட அவருக்கு இருந்த 7 செல்லான்களுக்கு ரூ2500 அபராதம் செலுத்தியுள்ளார். பா.ஜ மாநில தலைவர் பி.ஒய் விஜயேந்திரா 10 செல்லான்களுக்கு ரூ3250 அபராதம் செலுத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் செய்திகளில் வரும் போது மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு 50 சதவீத தள்ளுபடியில் அபராத தொகையை செலுத்தினர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்நாடக அரசு எடுத்த இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க தக்கது தான். நீண்ட காலம் அதிக தொகை காரணமாக செலுத்தாமல் பலர் வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருகட்டத்திற்கு பிறகு செலுத்ததாத அபராதங்களாகவே இருக்கும். இதற்கு 50 சதவீதம் அளவிற்கு தள்ளுபடியை வழங்கினால் நிச்சயம் மக்களுக்கும் சுலபமாக இருக்கும் அரசுக்கும் அபராதத்தை வசூல் செய்ததாக இருக்கும். தமிழக அரசும் இது போன்ற முயற்சிகளை கையில் எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









