பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

இன்று பிறந்த நாள் காணும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் எளிமையான வாழ்வு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

தலைவி சன்னி லியோனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்றுதான் (மே 13) பேஸ்புக்கில் கொண்டாடி தீர்த்தனர். இன்று (மே 14) அந்த பேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கே (Mark Zuckerberg) பிறந்தநாள்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 1984ம் ஆண்டு மே 14ம் தேதி பிறந்தார். இன்று அவருக்கு 35வது பிறந்தநாள். ஆனால் இந்த இளம் வயதிலேயே உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு தோராயமாக 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் அவரது மூளையும், பேஸ்புக் நிறுவனமும்தான். தற்போது உலகின் மிகப்பெரிய சமூக வலை தளமாக பேஸ்புக் திகழ்கிறது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

இந்தியாவை எடுத்து கொண்டால், பேஸ்புக்கிற்கு அடிமையானவர்கள் லட்சோப லட்சம் பேர். ஒருவேளை பேஸ்புக் இல்லாமல் போனால், அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

உலகில் பெரும்பாலான பணக்காரர்கள், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். லக்ஸரி கார்கள் மூலம் தங்களுடைய அந்தஸ்து இந்த உலகிற்கு தெரிவதாக அவர்கள் கருதுகின்றனர்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

ஆனால் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களுக்கு அப்படியே நேர் எதிரானவர். எளிமையின் அடையாளமாக மார்க் ஜூக்கர்பெர்க்கை குறிப்பிடலாம். மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் ஒரு பேன்ஸி அல்லது விலை உயர்ந்த கார் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

Image Source:News18

தினசரி அலுவலகம் சென்று வருவதற்கு மிகவும் சாதாரணமான ஹோண்டா ஃபிட் (Honda Fit) ஹேட்ச்பேக் காரைதான் மார்க் ஜூக்கர்பெர்க் பயன்படுத்தி வருகிறார். இந்தியாவில் இந்த கார் ஹோண்டா ஜாஸ் (Honda Jazz) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

ஹோண்டா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்தான் ஃபிட். இதன் முந்தைய தலைமுறை மாடலைதான் மார்க் ஜூக்கர்பெர்க் வைத்துள்ளார். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் இது உண்மைதான்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

ஆனால் ஹோண்டா ஃபிட் தவிர, ஃபோக்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) ஹேட்ச்பேக் மற்றும் அக்யூரா டிஎஸ்எக்ஸ் (Acura TSX) செடான் ஆகிய கார்களையும் மார்க் ஜூக்கர்பெர்க் வைத்துள்ளார். ஆனால் இவையும் லக்ஸரி கார்கள் எல்லாம் கிடையாது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் உள்ள அனைத்து கார்களின் ஒட்டுமொத்த மதிப்பும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு உள்ளாகதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் இது தோராயமாக 21 லட்ச ரூபாய் மட்டுமே.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

ஆனால் இந்தியாவில் தற்போது சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தினர் கூட 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட கார்களை பேங்க் லோன் போட்டாவது வாங்க தொடங்கி விட்டனர் என்பதை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

இத்தனைக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் வயதானவரும் கூட கிடையாது. இளம் வயதிலேயே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்து விட்ட போதிலும் மார்க் ஜூக்கர்பெர்க் எளிமையை கடைபிடிப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

மார்க் ஜூக்கர்பெர்க் தினசரி அலுவலகம் சென்று வர பயன்படுத்தும் ஹோண்டா ஃபிட் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த காரைதான் ஹோண்டா நிறுவனம் ஜாஸ் என்ற பெயரில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

ஹோண்டா ஜாஸ் 2018 கார் ரூ.7.39 லட்சம் முதல் 9.33 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். எஸ், வி மற்றும் விஎக்ஸ் என மொத்தம் 3 வேரியண்ட்களில் ஹோண்டா ஜாஸ் கிடைக்கிறது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் ஹோண்டா ஜாஸ் கார் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பேஸ்புக் சிஇஓ மார்க் இந்த சாதாரண கார்களைதான் பயன்படுத்துகிறார்... நம்புவது கொஞ்சம் கடினம்தான்...

அதே சமயம் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லது. இதனிடையே புதிய ஹோண்டா ஜாஸ் கார் ஹைப்ரிட் மாடலிலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Happy Birthday Mark Zuckerberg: Humble Cars Of Facebook CEO. Read in Tamil
Story first published: Tuesday, May 14, 2019, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X