மும்பை ஏர்போர்ட்டை மிரள வைத்த காரில் ஏறி சென்றது இவ்வளவு பெரிய பிரபலமா? காரை பார்க்க 2 கண்கள் பத்தல!!

இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலர் சொகுசு கார்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, எம்.எஸ் தோனி, விராட் கோலி என சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோன்று, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) அவர்களும் லக்சரி கார்கள் மீது அதிக ஈடுப்பாடு கொண்டவர். எந்த அளவிற்கு என்றால், ஹர்திக் பாண்ட்யா அவரது பிரபலமான ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை ஒரு மாதத்தில் வேறொரு புதிய தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவின் இந்த ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும், அது எவ்வாறான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டில் மகேந்திர சிங் தோனியை நேரில் அவரது வீட்டில் சந்தித்தது மட்டுமில்லாமல், அவரது பைக் & கார் கேரேஜையும் பார்வையிட்டதில் இருந்து ஹர்திக் பாண்ட்யா எந்த அளவிற்கு சொகுசு கார் பிரியர் என்பதை அறிய முடிந்தது. அப்போது, தோனியுடன் அவரது கேரேஜில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு இருந்தார்.

hardik pandya changed range rover

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அவ்வப்போது விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்களில் ஹர்திக் பாண்ட்யாவும் ஒருவராவார். சமீபத்தில், தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை 3-1 என்கிற வித்தியாசத்தில் வென்ற மகிழ்ச்சி உடன் ஹர்திக் பண்ட்யா மற்ற வீரர்களுடன் இந்தியா திரும்பியுள்ளார். மும்பையில் தரையிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவை அழைத்துச் செல்ல அவரது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் வந்தது.

இந்த காரை கடந்த அக்டோபர் மாதத்தில்தான் ஹர்திக் பாண்ட்யா வாங்கினார். புத்தம் புதிய கார் என்பதால், தனது போக்குவரத்துக்கு இந்த காரை தான் ஹர்திக் பாண்ட்யா பிரதானமாக பயன்படுத்தி வருகிறார். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் டெலிவிரி செய்யப்பட்ட போது ஹர்திக் பாண்ட்யாவின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் இவ்வாறான தோற்றத்தில் இல்லை. அதாவது, வாங்கிய பின் ஹர்திக் பாண்ட்யா அவரது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை மாடிஃபை செய்துள்ளார்.

hardik pandya changed range rover

ஷோரூமில் இருந்து கடந்த அக்டோபர் மாதத்தில் ஹர்திக் பாண்ட்யா வாங்கிய சமயத்தில் இந்த வாகனம் சாண்டோரினி கருப்பு நிறத்தில் இருந்தது. ஆனால், தற்போது இந்த கார் இளம்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. அதாவது, வாங்கிய பிறகு இந்த காரை சிவப்பு வ்ராப்-ஆல் மூடியுள்ளனர். இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் இந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் இன்னும் மாடர்ன் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஹர்திக் பாண்ட்யாவின் இந்த ரேஞ்ச் ரோவர் காரில் "1234" என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் இருப்பதை காணலாம். இதே நம்பர் பிளேட்டை முன்னதாக தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காருக்காகவும் இவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்ட்யா வைத்திருப்பது, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எஸ்.இ டைனாமிக் என்கிற விலைமிக்க வேரியண்ட் ஆகும்.

hardik pandya changed range rover

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் இந்த வேரியண்ட் இன்னும் மூர்க்கதனமான தோற்றம் கொண்டது ஆகும். இந்த காரில் 22-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் க்ரில் வழங்கப்படுகிறது. வெளிப்பக்க தோற்றம் முரட்டுத்தனமானதாக இருந்தாலும், இந்த காருக்கு உள்ளே லக்சரியான மற்றும் சவுகரியமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, காருக்குள் முன் இருக்கைகள் இரண்டும் ஹீட்டிங் & வெண்டிலேஷன் வசதிகளுடன் கிடைக்கின்றன.

டேஸ்போர்டில் திரைகள் வழங்கப்படுவதுடன், பின் இருக்கை பயணிகளுக்கும் 11.4-இன்ச்சில் பொழுதுப்போக்கு திரை கொடுக்கப்படுகிறது. இவற்றுடன் மெரிடியன் சவுண்ட் சிஸ்டத்தை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் வழங்குகின்றனர். இத்தகைய ரேஞ்ச் ரோவர் கார் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் லெக்ஸஸ் எல்.எம்350எச் மற்றும் லம்போர்கினி ஹூராகென் எவோ கார்களும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹர்திக் பாண்ட்யா மிகவும் ஸ்டைலிஷான மனிதர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அவரது ஸ்டைலுக்கு ஏற்ற தோற்றத்தில் இந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் காட்சியளிக்கிறது. புதியதாக வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரை இவ்வாறான தோற்றத்திற்கு ஹர்திக் பாண்ட்யா மாற்றியிருப்பார் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 22:15 [IST]
English summary
Hardik pandya changed his range rover sport car colour to red check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X