பெற்ற சம்பளத்தில் பெற்ற தகப்பனுக்கு சொகுசுக் கார் வாங்கி பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்..!!

Written By:

ஜீப் காம்பஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, நாட்டின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பல.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

பல இந்திய வாடிக்கையாளர்கள் காம்பஸ் காரை சொந்தமாக வாங்க துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக உள்ள ஹர்திக் தனது சகோதரர் குர்னால் பாண்டியா உடன் இணைந்து, புதிய ஜீப் காம்பஸ் காரை வாங்கியுள்ளார்.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

இதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்திக், புதிய ஜீப் காம்பஸ் காரை சகோதரர் உடன் இணைந்து அவரது தந்தைக்கு பரிசளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

இலங்கை உடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாவது ஆட்டத்தில் 100 ரன்களை குவித்தார், இதன்மூலம் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புகழடைந்தார் ஹர்திக் பாண்டியா.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் கோலோச்சிய ஹர்திக், அதில் கிடைத்த சம்பளத்தின் மூலம் புதிய காம்பஸ் காரை வாங்கி அதை தந்தைக்கு பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

வீரர் ஹர்திக் வாங்கியுள்ள அடர் சிவப்பு நிறத்திலான கார், குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் டீசல் மாடல் காராகும்.

இதனுடைய க்ரில் அமைப்பு மற்றும் தேர்ந்த தோற்றம், செயல்திறன் மதிப்பீடு ஆகியவற்றுக்காகவே நமது வாடிக்கையாளர்கள் மதி மயங்கி உள்ளனர்.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

டூயல் டோன் கேமின்களுடன் கூடிய ஜீப் காம்பஸ் மாடல் காரின் தோரணையான வடிவமைப்பு மிகுந்த நுணுக்கங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையில் ஓட்டுநர் இருக்கை, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதிகளும் உள்ளன.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

ஹர்திக் பாண்டியா வாங்கியுள்ள ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காரில் 2-லிட்டர் மல்டிஜெட் 2 டர்போ டீசல் எஞ்சின் கொண்ட உள்ளது. இது 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள இந்த காரின் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே என இரண்டையுமே தேர்வு செய்யும்.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

இந்த மாடல் காரின் டாப்-ஸ்பெக் வேரியண்டில் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், செலக்ட் டெரைன் ஃபூயச்சர் போன்ற சாலை தேர்வுகளுக்கான வசதிகள் உள்ளன.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

ஏர்பேகுகள், ஏபிஎஸ், பிரேக் மற்றும் ஹிஸ் அசிஸ்ட், இஎஸ்பி, இபிடி போன்ற 50 விதமான பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் காம்பஸ் எஸ்.யூ.வி கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

ஜூலை மாதம் இந்தியாவில் ரூ.14.95 லட்சம் தொடக்க விலையில் ஜீப் காம்பஸ் கார் மாடல்கள் விற்பனைக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தந்தைக்கு ஜீப் காம்பஸ் காரை பரிசளித்த இளம் கிரிக்கெட் வீரர்!

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு திறன்களிலும் இயங்கும் தேவைகளோடு மொத்தம் 10 வேரியண்டுகள் ஜீப் காம்பஸ் காரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Hardik Pandya Gifts India's Most Wanted Jeep Compass SUV car to his Father. Click for Details...
Story first published: Tuesday, August 22, 2017, 11:21 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos