மனைவியை கதற விட்டுட்டு நடிகையுடன் 12 கோடி ரூபா காரில் ஊர் சுற்றியது அவரா! வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
இந்தியாவில் மிகவும் பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த காலங்களில் நிகழ்ந்த பிரபலங்கள் பலரின் விவாகரத்துக்கள், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஒரு விவகாரத்து வழக்கு தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அது தவெக என சுருக்கமாக குறிப்பிடப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவரும், நடிகருமான விஜய் (Vijay) மற்றும் அவரது மனைவி சங்கீதா (Sangeetha) ஆகியோரின் விவாகரத்து வழக்கு ஆகும். தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election) வரும் ஏப்ரல் 23ம் தேதி (April 23) நடைபெறவுள்ள நிலையில், இவர்களுடைய விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

இதற்கு பிரபல நடிகையான த்ரிஷா (Trisha) உடன், விஜய் திருமணம் கடந்த உறவில் இருப்பதுதான் காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் மற்றும் த்ரிஷா பொது வெளியில் ஒன்றாக தோன்றி கொண்டுதான் உள்ளனர். இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன.
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கிற்கு முன்பாக, மற்றொரு விவாகரத்து வழக்கு, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக பேசு பொருளாக இருந்தது. அது கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் நடஷா ஸ்டான்கோவிக் (Natasa Stankovic) இடையேயான விவாகரத்து வழக்கு ஆகும்.

இவர்களது திருமணம் மிக குறுகிய காலத்திலேயே விவாரகத்தில் முடிவடைந்தது, அவர்களது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது நடஷா ஸ்டான்கோவிக்கை, ஹர்திக் பாண்டியா ஏமாற்றியதாக அதிகாரப்பூர்வமற்ற பல்வேறு தகவல்கள் வலம் வந்தன. தற்போது அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, நடிகையும், மாடலுமான மஹிஹா ஷர்மாவை (Mahieka Sharma) ஹர்திக் பாண்டியா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பல்வேறு பொது இடங்களுக்கு தற்போது ஒன்றாக வந்து சென்று கொண்டுள்ளனர்.
இந்த வரிசையில், மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றில், ஹர்திக் பாண்டியா - மஹிஹா ஷர்மா ஆகிய இருவரும் ஒன்றாக பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் (YouTube) பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, ஃபெராரி 12சிலிண்டரி (Ferrari 12Cilindri) கார் ஆகும். ஹர்திக் பாண்டியா இந்த காரை தற்போது புதிதாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த காரின் விலை (Price) சுமார் 12 கோடி ரூபாய் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் கார் கலெக்ஸன் (Car Collection) ஏற்கனவே மிகப்பெரியதாகதான் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes AMG G63), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) மற்றும் ஆடி ஏ6 (Audi A6) போன்ற கார்களை எல்லாம் ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார்.
இந்த வரிசையில் அவரது கார் கலெக்ஸனில் ஃபெராரி 12சிலிண்டரி இணைந்துள்ளது. இந்த காரில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 800 ஹெச்பி பவரை உருவாக்கி, சாலைகளில் சீறி பாய்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 340 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹர்திக் பாண்டியா அவருடைய கிரிக்கெட் திறன்களுக்காக மட்டுமல்லாது, ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் அறியப்படுகிறார். குறிப்பாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர் அதிகமாக விரும்ப கூடியவர். அவரது கார் கலெக்ஸன் மூலமாகவே இதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் தற்போது வாங்கியுள்ள ஃபெராரி 12சிலிண்டரி, மிகவும் சக்தி வாயந்த கார் ஆகும்.


Click it and Unblock the Notifications








