எதுவும் சீதனமா வந்தது இல்லை... எல்லாமே கடின உழைப்பு! ஒவ்வொரு காரும் ஒவ்வொரு ரகத்துல இருக்கிறது!!
ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), இந்திய கிரிக்கெட் (Cricket) அணியின் முன்னணி வீரரான இவரை பற்றி அறியாதவே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஐபிஎல் (IPL) மூலம் கவனத்தை பெற ஆரம்பித்த ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் அணியை வழிநடத்தும் கேப்டன் (Captain) அளவுக்கு வளர்ந்துள்ளார். அவ்வப்போது ஏற்படும் காயங்கள் தான் இவருக்கு பின்னடைவாக உள்ளது. இருப்பினும், ரோஹித் சர்மா (Rohit Sharma)-க்கு பிறகு அணியின் கேப்டனாக பிசிசிஐ (BCCI) யோசிக்கும் வீரர்களில் ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளார்.
கிரிக்கெட் மட்டுமின்றி, ஹர்திக் பாண்ட்யா விலையுயர்ந்த கார்களை வாங்குவதை ஆர்வம் கொண்டவராக உள்ளார். ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கான மார்க்கெட்டிங் தூதர் (Ambassador)-ஆக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். இத்தகையவரிடம் உள்ள சில விலையுயர்ந்த கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பி.எம்.டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி (BMW 6 Series GT): ஹர்திக் பாண்ட்யாவின் முன்னாள் மனைவி ஸ்டான்கோவிக் (Stankovic) அதிகமாக பயன்படுத்தியது இந்த காரை ஆகும். செர்பியா (Serbia) நாட்டை சேர்ந்த டேன்சரான ஸ்டான்கோவிக் இந்தியாவில் பலமுறை இந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரில் காட்சி தந்துள்ளார். கார் பார்ப்பதற்கு லக்சரி தோற்றத்தில் இருப்பது மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சிறந்ததாக 6 சீரிஸ் ஜிடி விளங்குகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (Mercedes-Benz G-Class): உலகளவில் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனங்களில் ஜி-கிளாஸ் ஒன்றாகும். ஏனெனில், எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய ஜி-கிளாஸ் ஆனது அதேநேரத்தில் அதிக செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால்தான், ரூ.2.55 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பென்ஸ் வாகனத்தை ஹர்திக் பாண்ட்யா போன்ற விவிஐபிகளிடம் மட்டுமே பார்க்க முடிகிறது.

ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Ranger Rover Autobiography): ரேஞ்ச் ரோவர் கார்களுக்கும் நம் இந்தியர்களுக்கும் ஓர் நீண்ட கால காதல் கதை உள்ளது. அந்த வகையில், ஹர்திக் பாண்ட்யாவிடமும் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. ஹர்திக் வைத்திருப்பது, ரேஞ்ச் ரோவர் கார்களின் டாப்-வேரியண்ட்டான ஆட்டோபயோகிராபி (Autobiography)-ஐ ஆகும். இதில், ஏகப்பட்ட மாடர்ன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

ரேஞ்ச் ரோவர் எஸ்வி எடிசன் (Range Rover SV Edition): ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் வாங்கிய கார் இதுவாகும். இதனால், ஹர்திக் பாண்ட்யாவின் கேரேஜ் (Garage)-இல் புத்தம் புதிய காராக ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஜொலிக்கிறது. ஹர்திக் பாண்ட்யா மட்டுமின்றி, பல பாலிவுட் பிரபலங்களும் சமீப காலத்தில் புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரை வாங்கியுள்ளனர். இந்த புதிய காரில் 3.0 லிட்டர் பி400 இங்கேனியம் டர்போசார்ஜ்டு இன்லைன் 6-சிலிண்டர் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

லெக்ஸஸ் எல்.எம் 350எச் (Lexus LM 350h): கடந்த சில மாதங்களில் ஹர்திக் பாண்ட்யா வாங்கிய மற்றொரு கார் லெக்ஸஸ் எல்.எம் 350எச் என்கிற பிரம்மாண்ட எம்பிவி கார் ஆகும். வெள்ளை நிறத்தில் இந்த சொகுசு காரை இவர் வாங்கியுள்ளதை சமீபத்தில் வெளியே கொண்டுவந்த போது பார்த்திருந்தோம். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லெக்ஸஸ் காரையும் அம்பானியில் இருந்து, நடிகர் ஷாரூக்கான், ஆலியா பட் மற்றும் ஜான்வி கபூர் வரையில் வாங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விராட் கோலி (Virat Kholi)-ஐ போன்று ஸ்டைலான கிரிக்கெட் வீரராக இருப்பதாலேயே, நிறைய கார்பிரேட் ஒப்பந்தங்கள் (Corporate Agreements) ஹர்திக் பாண்ட்யாவை தேடி வருகின்றன. இதனால் இவர் வரும் காலங்களில் இன்னும் பல சொகுசு கார்களை வாங்குவார் என எதிர்பார்க்கிறோம். ஹர்திக் பாண்ட்யாவிடம் தற்போதுள்ள கார்களில் உங்களுக்கு பிடித்தது எது என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









