இந்தியாவே தலையில தூக்கி வெச்சு கொண்டாடும் மனுஷனை டைவர்ஸ் பண்ணீட்டு கோடி ரூபா சொகுசு காரில் வலம் வரும் நடிகை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி (BMW 6 Series GT). இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்ற கோடீஸ்வரர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களுக்கு பொதுவாகவே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 6 சீரிஸ் ஜிடி காரை பயன்படுத்துவதற்கு பிரபல மனிதர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதில், பாலிவுட் நடிகர் ஜிம் ஷர்பா (Jim Sarbh) மற்றும் தொலைக்காட்சி நடிகை கிரிஸ்டில் டிசௌசா (Krystle D'Souza) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்களிடம் எல்லாம் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி சொகுசு கார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 73.50 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது.

Natasa Stankovic Spotted In BMW 6 Series GT

அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரின் டாப் வேரியண்ட், 78.90 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரின் அனைத்து வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலையும் (On-road Price) தோராயமாக 1 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரில், பிரபல நடிகை ஒருவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது நடஷா ஸ்டான்கோவிக் (Natasa Stankovic) ஆவார்.

Natasa Stankovic

இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க பல வெற்றிகளை ஈட்டி தந்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் (Hardik Pandya) முன்னாள் மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவரும் தற்போது விவாகரத்து பெற்று விட்டனர்.

ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து விவகாரத்து பெற்ற காரணத்தால், சமூக வலை தளங்களில், நடஷா ஸ்டான்கோவிக்கை ரசிகர்கள் மிக கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் நடஷா ஸ்டான்கோவிக் அதை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. உடற்பயிற்சி, தொழில் என தன்னுடைய சொந்த விஷயங்களில் அவர் கவனம் செலுத்தி கொண்டுள்ளார்.

இதன்படி மும்பையில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சிகளை முடித்து விட்டு வெளியே வந்து பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் ஏறும் சமயத்தில்தான், தற்போது வைரலாக பரவி வரும் நடாஷா ஸ்டான்கோவிக்கின் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் நடாஷா ஸ்டான்கோவிக்கை பார்ப்பது இது முதல் முறை கிடையாது.

கடந்த காலங்களிலும் பல முறை அவரை இதே காருடன் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. ஜிம் மட்டுமல்லாது சலூன் போன்ற இடங்களுக்கு வந்து செல்வதற்கும் கூட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரை நடாஷா ஸ்டான்கோவிக் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். இந்த விலை உயர்ந்த காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

அவை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 258 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே நேரத்தில் பெரிய 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 265 பிஎஸ் பவர் மற்றும் 620 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி, சாலையில் சீறி பாய்ந்து செல்ல கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 இன்ஜின்களுடனுமே, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது. இது விலை உயர்ந்த கார் என்பதால், சொகுசு வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், தலா 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை தவிர, பின் இருக்கை பயணிகளுக்கு தனியாக தலா 10.25 இன்ச் அளவில் 2 டச்ஸ்க்ரீன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், ட்யூயல் பேன் பனரோமிக் க்ளாஸ் ரூஃப், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. இருப்பினும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) போன்ற கார்களை, பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரின் போட்டி மாடல்களாக குறிப்பிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடஷா ஸ்டான்கோவிக் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர்கள். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரையில், அவரது கார் கலெக்ஸன் (Car Collection) உண்மையிலேயே மிகப்பெரியது.

லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan EVO), ஃபோர்ஷே கேயென்னே (Porsche Cayenne), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h), ஆடி ஏ6 (Audi A6) மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes AMG G63) ஆகிய கார்களை எல்லாம் ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார்.

Take a Poll

அத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் கார் ஒன்றையும் ஹர்திக் பாண்டியா வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு விலை உயர்ந்த கார்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடஷா ஸ்டான்கோவிக்கை கடந்த காலங்களில் நாம் ஒன்றாக பார்த்த நிலையில், தற்போது தனித்தனியாக பார்ப்பது உண்மையிலேயே வருத்தமான ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 23:54 [IST]
English summary
Hardik pandya s ex wife natasa stankovic spotted in bmw 6 series gt viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+