பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). இவரது சகோதரர் குர்ணல் பாண்டியாவும் (Krunal Pandya) நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். இர்பான் பதான், யூசுப் பதான் வரிசையில் பாண்டியா சகோதரர்களும் மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை தொட்டுள்ளனர்.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

அதிலும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை உறுதி செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63 SUV) எஸ்யூவி ரக காரை ஹர்திக் பாண்டியா வாங்கியிருந்தார். இதன் விலை எவ்வளவு தெரியுமா? 2.19 கோடி ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

இதுதவிர ஆடி ஏ6 35டிடிஐ (Audi A6 35TDI) காரையும் ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு வாங்கியிருந்தார். இது செடான் ரக கார் ஆகும். ஆடி நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. இதன் விலை சுமார் 65 லட்ச ரூபாய். லக்ஸரி கார்கள் மீது ஹர்திக் பாண்டியா கொண்டிருக்கும் காதலை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

இதனிடையே தற்போது மேலும் ஒரு விலை உயர்ந்த காரை ஹர்திக் பாண்டியா வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan EVO) சூப்பர் காரைதான் ஹர்திக் பாண்டியா தற்போது வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

பிரகாசமான ஆரஞ்ச் வண்ண லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரது சகோதரர் குர்ணல் பாண்டியாவும் உடனிருந்தார். ஆனால் இந்த புதிய காரின் வீடியோ, புகைப்படங்கள் எதையும் ஹர்திக் பாண்டியா சமூக வலை தளங்களில் பகிரவில்லை.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

என்றாலும் லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலை தள பயனாளர்கள் சிலர்தான் பகிர்ந்து வருகின்றனர். இதனால் ஹர்திக் பாண்டியா இந்த காரை வாங்கியுள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை பாண்டியா சகோதரர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்திருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 3.73 கோடி ரூபாய். இதில், 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் லம்போர்கினி வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 640 எச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரின் எடை 1,422 கிலோ கிராம். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும் திறன் லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காருக்கு உள்ளது. அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட வெறும் 9.0 வினாடிகளை மட்டுமே இந்த கார் எடுத்து கொள்ளும்.

பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி லம்போர்கினி ஹூராகேன் எவோ சூப்பர் காரை ஹர்திக் பாண்டியா வாங்கியுள்ளாரா? என்பது தற்போது வரை உறுதியாக தெரியவில்லை. இது தொடர்பான தகவல் தெரியவந்தால் நாங்கள் உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்.

Source: Hindustan Times

More from DriveSpark

Article Published On: Sunday, August 18, 2019, 16:55 [IST]
English summary
Hardik Pandya Spotted Driving New Lamborghini Huracan EVO Super Car. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+