TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு கிடைத்த ஆடி ஏ6 கார் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் பவுலருக்கு ஆடி ஏ6 கார் பரிசாக கிடைத்துள்ளது. அந்த கார் அவருக்கு எதற்காக கிடைத்தது? அப்படி அந்த காரில் என்ன அம்சங்கள் இருக்கின்றன? உங்களுக்கு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் டீமில் உள்ள சிறந்த பவுலவர்களில் ஹர்த்திக் பாண்டியாவும் ஒருவர் இவரது விளையாட்டு திறமையை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதான இந்தியன் ஸ்போட்ஸ் ஹார்னர் விருதில் "பிரேக் த்ரு பேர்பாமன்ஸ்" விருது கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியவுக்கு வழங்கப்பட்டது.
அந்த விருதை பெற்றமைக்காக ஆடி நிறுவனம் அவருக்கு ஆடி ஏ6 35டிடிஐ என்ற காரை பரிசாக வழங்கியுள்ளது. இதன் மூலம் ஹார்த்திக் பாண்டியாவின் சொகுசு கார் கராஜில் ஆடி ஏ6 காரும் இணைந்துள்ளது.
அவரிடம் ஏற்கனவே ரேஞ்ச் ரோவர் வோக் என்ற எஸ்.யூ.வி சொகுசு காரும் உள்ளது. தற்போது அதனுடி ஆடி ஏ6 காரும் இணைந்துள்ளது.
ஆடி ஏ6 காரை பொறுத்தவரையில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வரும் ஆடி கார் இது. இது மெர்சிடியஸ் பென்ஸ் இ கிளாஸ், பி.எம்.டபிள்யூ 5 சீரியஸ், ஆகிய கார்களுக்கு இது போட்டியாக திகழ்கிறது.
ஆடி ஏ6 35 டிடிஐ மும்பையில் ரூ 65 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது,. பாண்டியாவிற்கு வழங்கப்பட்ட கார் இந்தியாகவில் ஆடி கார்களை விற்பனை செய்து வரும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடி ஏ6 காரை பொருத்தவைர 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது. இது 190 பிஎச்பி. பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
பிரண்ட் வீல் டிரைவ் உள்ள இந்த வண்டியில் 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 166 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது. இந்த காரில் பெட்ரோல் வேரியண்டும் விற்பனைக்கு உள்ளது.
இதன் பெட்ரோல் வேரியண்ட் டீசல் வேரியண்ட்டை விட ரூ 3 லட்சம் குறைவாக கிடைக்கிறது. அது 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 190 பிஎச்பி பவர், 320 என்எம் டார் திறனை வெளிப்படுத்தக்கூடியது. பெட்ரோல் மாடலும் 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.
பாண்டியாவிற்கு வழங்கப்பட்ட காரில் 8 ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஈ.எஸ்.பி. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு, உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
01. ஃபெராரி காரை வாங்க லண்டன் வங்கியில் லோன் கேட்ட மல்லையா! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
02.2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
03.விபத்தில் சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார்... அதான்யா மாருதி!!
04.உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்
05.புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 10 முக்கிய அம்சங்கள்!!