வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! என்னோட ஃபாதர் கனடாவுல...

வடிவேலு ஸ்டைலை பின்பற்றி, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக் திருடி செல்லப்பட்டுள்ளது. இந்த நூதன திருட்டு சம்பவம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

வடிவேலு ஸ்டைலை பின்பற்றி, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக் திருடி செல்லப்பட்டுள்ளது. இந்த நூதன திருட்டு சம்பவம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் அஜய் சிங். இவருக்கு நேர்ந்த சோகம் வேறு யாருக்கும் நேரக்கூடாது. ஆம், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இவரது ஹார்லி டேவிட்சன் பைக்கை, நுனி நாக்கு ஆங்கிலம் பேசிய நவ நாகரீக ஆசாமி ஒருவர், வடிவேலு ஸ்டைலில் திருடி சென்று விட்டார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை, அஜய் சிங் வைத்திருந்தார். இதனை விற்பனை செய்வது என கடந்த சில நாட்களுக்கு முன் அஜய் சிங் முடிவு எடுத்தார். இதனால் ஹார்லி டேவிட்சன் பைக் விற்பனைக்கு உள்ளது என ஆன்லைனில், கடந்த 13ம் தேதி விளம்பரம் கொடுத்தார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

மறுநாளே அஜய் சிங்குக்கு மெசேஜ் செய்த ஒருவர், தன்னை ராகுல் நாகர் (30) என அறிமுகம் செய்து கொண்டார். அஜய் சிங்கின் ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்க விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்பின் இருவரும் வாட்ஸ் அப்பில் பேசி கொண்டனர்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

ராகுல் நாகர் ஆக்ராவில் வசிப்பதாகவும், மார்பிள் பிஸ்னஸ் செய்வதாகவும், அஜய் சிங்கிடம் கூறியுள்ளார். அத்துடன் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மார்பிள்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் ராகுல் நாகர் தெரிவித்துள்ளார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

ஆனால் டீல் பேசி முடிக்கும் முன்பாக, பைக்கை ஒரு முறை பார்வையிட வேண்டும் என ராகுல் நாகர் விருப்பம் தெரிவித்தார். பைக்கை சோதனை செய்து பார்ப்பதற்காக, 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆக்ராவில் இருந்து நானே குருகிராம் வருகிறேன் எனவும் ராகுல் நாகர் கூறினார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

அந்த நாளும் வந்தது. ராகுல் நாகரும் வந்தார். காலை 11.30 மணியளவில், அஜய் சிங்கின் ஹார்லி டேவிட்சன் பைக்கை பார்வையிட்ட ராகுல் நாகர், விரைவில் நல்ல பதிலை வழங்குவதாக கூறினார். இதன்பின் ராகுல் நாகர் அங்கிருந்து சென்று விட்டார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

அன்றைய தினம் மதியம் 3.30 மணியளவில், அஜய் சிங்கிற்கு ஒரு மெசேஜ் வந்தது. செக்டார் 34 எனும் பகுதியில் உள்ள ஹார்லி டேவிட்சன் ஷோ ரூமிற்கு வரும்படி அஜய் சிங்கை, ராகுல் நாகர் அழைத்திருந்தார். இவ்வளவு விரைவாக ரிப்ளை வரும் என அஜய் சிங்கே நினைத்திருக்க மாட்டார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

ஷோரூமில் வைத்து பைக்கின் ஹிஸ்டரியை அறிந்து கொள்ள விரும்புவதாக ராகுல் நாகர் கூறியிருந்தார். இதனை நம்பி அஜய் சிங்கும் சென்றார். இதன்பின் அஜய் சிங் முன்னிலையில், ஷோ ரூம் ஊழியரிடம் பைக்கின் ஹிஸ்டரியை, ராகுல் நாகர் கேட்டு அறிந்து கொண்டார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

இதன்பின் வெளியே வந்த இருவரும், பைக்கில் டீல் பேசியுள்ளனர். பல கட்டமாக நடந்த பேரத்தின் இறுதியில், 7 லட்ச ரூபாய்க்கு பைக்கை வாங்கி கொள்ள ராகுல் நாகர் சம்மதம் தெரிவித்தார். இதற்கு முன் பணமாக 7 ஆயிரம் ரூபாயை அஜய் சிங்கிடம் கொடுத்தார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

எப்படியோ பைக்பை ஒரு நல்ல விலைக்கு விற்று விட்ட மகிழ்ச்சியில் அஜய் சிங் இருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ஏனெனில் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என ராகுல் நாகர் வேண்டுகோள் விடுத்தார்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

டீல்தான் முடிந்து விட்டதே. நம்பி கொடுக்கலாம் என அஜய் சிங்கும் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க கொடுத்து விட்டார். ஆனால் பெருந்தன்மை என நினைத்து, ராகுல் நாகருடன் அஜய் சிங் செல்லவில்லை. அவ்வளவுதான். டெஸ்ட் ரைடு சென்ற ராகுல் நாகர் தற்போது வரை திரும்பி வரவே இல்லை!!

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

இதனால் அதிர்ச்சியடைந்த அஜய் சிங், ராகுல் நாகரின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தார். முதலில் ஒரிரு முறை ரிங் சென்றது. ஆனால் ராகுல் நாகர் போனை எடுக்கவில்லை. அதன்பின் சில நிமிடங்களில் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

அதன்பின்தான் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அஜய் சிங் புரிந்து கொண்டார். உடனடியாக ஷோ ரூமில் இருந்த சிசிடிவி ஆதாரங்களை வாங்கி கொண்ட அஜய் சிங், போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

பைக்கை திருடி சென்ற நபர் நுனி நாக்கு ஆங்கிலம் பேசியுள்ளார். ஹார்லி டேவிட்சன் மட்டுமல்லாமல் அனைத்து பைக்குகள் குறித்த ஆழமான அறிவும் அவருக்கு இருந்துள்ளது. அவர் ஜென்யூன்-ஆக இருந்ததால்தான், நம்பி மோசம் போய்விட்டேன் என புலம்பி கொண்டிருக்கிறார் அஜய் சிங்.

வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! ஒரு மனுஷன் இவ்ளோ நேரமா டெஸ்ட் ரைடு போவான்?

குண்டக்க மண்டக்க என்ற காமெடி படத்தில் இதேபோன்று ஒரு காட்சி இருக்கும். அதில், தனியாக டெஸ்ட் டிரைவ் பார்க்க வடிவேலு ஆட்டோவை கேட்பார். பார்க்க டீசெண்ட் ஆக இருப்பதாக கூறி ஆட்டோவை விற்பனை செய்வரும் நம்பி கொடுத்து விடுவார். ஆனால் வடிவேலு, ஆட்டோவை திருடி சென்று விடுவார்.

Article Published On: Wednesday, June 20, 2018, 11:09 [IST]
English summary
Harley Davidson BikeWorth Rs 10 Lakh Stolen In GurugramOn Pretext Of 'Test Drive'. Read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+