ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஏலத்திற்கு வருகிறது
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் படத்தில் வந்த ஹார்லி டேவிட்சன் பைக் வரும் ஜூன் மாதம் ஏலத்திற்கு வருகிறது. இந்த பைக் ரூ 2 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் படத்தில் வந்த ஹார்லி டேவிட்சன் பைக் வரும் ஜூன் மாதம் ஏலத்திற்கு வருகிறது. இந்த பைக் ரூ 2 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் செம மார்க்கெட் இருக்கிறது. இந்தியர்கள் ஹாலிவுட் படத்தை ரசிக்கும் அளவிற்கு அந்நாட்டு மக்கள் அந்த படங்களை ரசிக்கிறார்களா என்பது கூட சந்தேகம் தான். இப்படி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு மட்டும் ரசிகர் பட்டாளம் இருக்காதா என்ன?

இப்படி ஹாலிவுட் படங்களில் நடத்தும் தன் கட்டழகான உடம்பாலும் மக்களை கவர்த்து இழுத்த அர்னால்டு நடித்த படம் தான் டெர்மினேட்டர். இந்த படத்தின் இரண்டாம் பாகமான 1991ம் ஆண்டு வெளியான "டெர்மினேட்டர் - 2 ; ஜட்ஜ்மெண்ட் டே" என்ற படத்தின் அர்னால்டிற்கு சரிசமான புகழை அந்த படத்தில் அவர் பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் என்ற பைக்கும் பெற்றது.

இந்த பைக்கிங் புகழ் எவ்வளவுக்கு பரவியது என்றால் இந்தியாவில் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் சில தங்கள் பைக்கை இந்த பைக் போல மாடிபிகேஷன் செய்து கூட பயன்படுத்தினர். அவ்வறாக இந்த பைக் மக்கள் மத்தியில் எவ்வளவு புகழ் பெற்றது என்பதை நாம் உணர முடியும். அந்த படத்தில் இந்த பைக் வரும் காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
இப்படியாக மக்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றபின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு ஃபேட்பாய் பைக்குகள் அதிகளவு விற்பனையானது. இந்நிலையில் டெர்மனினேட்டர் படத்தில் அர்னால்டு பயன்படுத்திய பைக் தற்போது வரை பாதுகாக்கப்படு வருகிறது.

வரும் ஜூன் மாதம் 5ம் தேதி நடக்கும் ஐகான் லேஜன்ஸ் ஆப் ஹாவுட் என்ற ஏல நிகழ்ச்சியில் இந்த பைக் ஏலத்திற்கு வருகிறது. தற்போது இந்த பைக் ஓட்ட கூடிய கண்டிஷனில் இருக்கிறதா என்பது தெரியவில்லை ஆனால் இது வெளிப்புறத்தோற்றத்திற்கு பார்க்க அழகாக இருக்கும் படி பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பைக் சுமார் இந்திய மதிப்பில் ரூ 1.3 கோடியில் இருந்து ரூ 2 கோடி வரை விற்பனையாகும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஏலத்தில் இது போன்ற பல பொருட்கள் ஏலத்திற்கு வரவிருக்கிறது. இந்த ஏலத்தின் போது விலை போகாத பொருட்கள் பிரித்து கயலாங்கடைக்கு போடப்படும் என்றும், அதன் பரமரிப்பு செலவு அதிகரிப்பதால் இந்த முடிவு எனவும் அதை பராமரித்து வரும் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த ஏலத்தின் போது ஹாலிவுட் படங்களில் வந்து மிகவும் பரபலமான சுமார் 2000 பொருட்கள் ஏலத்திற்கு வரவிருக்கிறன. முக்கிய மாக பென்ஹர் படத்தில் வந்த சாரட், டெர்மினேட்டர் படத்தில் அர்னால்டு அணிந்தவந்த லேதர் ஜாக்கெட், கான் வித் த விண்ட் என்ற படத்தின் நடிகை பயன்படுத்திய அழகிய டிரஸ், என பல பொருட்கள் ஏலத்திற்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








