சென்னையில் ஹார்மன் ஷோரூம் திறப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் விசிட்!
அமெரிக்காவை சேர்ந்த ஹார்மன் நிறுவனம் கார் மற்றும் வீடுகளுக்கான மியூசிக் சிஸ்டம் தயாரிப்பில் மிக புகழ்பெற்றதாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் சமீபத்தில் நுங்கம்பாக்கத்திலுள்ள பெர்காமோ வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
ஹார்மன் தயாரிப்புகளையும், அதன் அங்கமான ஜேபிஎல் பிராண்டு சாதனங்களும் இந்த புதிய ஷோரூமில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ஷோரூமில் வீடுகள் மற்றும் கார்களில் பொருத்துவதற்கான ஏராளமான உயர்தர மியூசிக் சிஸ்டம், ஆடியோ சாதனங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, கார்களுக்கான மியூசிக் சிஸ்டம் பல ரகங்களில் கிடைக்கிறது.

இந்த ஷோரூமுக்கு ஹார்மனின் அங்கமான ஜேபிஎல் நிறுவனத்தின் விளம்பர தூதரான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் சமீபத்தில் வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த விதவிதமான மியூசிக் சிஸ்டம் மற்றும் சாதனங்களை அவர் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றார். உங்களது காருக்கும் சிறந்த மியூசிக் சிஸ்டத்தை பொருத்த நினைத்தால் இந்த ஷோரூமுக்கு ஒரு விசிட் அடியுங்கள்.


Click it and Unblock the Notifications








