அவ்ளோ பெரிய ஆள் சாதாரண மாருதி காரை வாங்கியிருக்காரா! இவரை இன்னுமா அடையாளம் தெரியல!
இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பிரீமியம் பைக்குகள் எல்லாம், அவர்களது ஆடம்பர வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகள் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளனர்.
மற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகளை போல் அல்லாமல், மிகவும் எளிமையான வாகனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஹர்ஷவர்தன் ரானே (Harshvardhan Rane) ஒரு உதாரணம். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ஹர்ஷவர்தன் ரானே, இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள ஒரு பிரபலமான நடிகர் ஆவார்.

இவர் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். இது ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை 12.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 14.96 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்திய சந்தையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற எஸ்யூவி கார்கள் உடன், மாருதி சுஸுகி ஜிம்னி கார் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

பொதுவாக பார்த்தால், மாருதி சுஸுகி ஜிம்னி சற்று விலை உயர்ந்த ஒரு காராகவே, இந்திய வாடிக்கையாளர்களால் கருதப்படுகிறது. ஆனால் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகர் ஒருவர் மாருதி சுஸுகி ஜிம்னியை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதிதாக வாங்கியுள்ள மாருதி சுஸுகி ஜிம்னி காருடன், தான் நிற்கும் புகைப்படங்களை, ஹர்ஷவர்தன் ரானே தனது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. புதிய மாருதி சுஸுகி ஜிம்னி காரில், ஹர்ஷவர்தன் ரானே தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
முன்னதாக பாலிவுட் நடிகர் ஃபர்தீன் கானும் (Fardeen Khan), மாருதி சுஸுகி ஜிம்னியை வாங்கியுள்ளார் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. அவர் அடிக்கடி மாருதி சுஸுகி ஜிம்னி காரை ஓட்டி கொண்டும் உள்ளார். மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவை எல்லாம், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் மிக முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும்.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 210 மிமீ ஆக உள்ளது. இதுவும் ஆஃப்-ரோடு பயணங்களை பிரச்னையில்லாமல் மேற்கொள்ள உதவி செய்கிறது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நீளம் வெறும் 3,985 மிமீ ஆக மட்டுமே உள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கூட, மாருதி சுஸுகி ஜிம்னி காரை எளிமையாக ஓட்ட முடியும்.
திரையுலக நட்சத்திரங்கள், மாருதி சுஸுகி ஜிம்னி காரை வாங்குவதற்கு, இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஹர்ஷவர்தன் ரானேவை பொறுத்தவரை ஏற்கனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova HyCross) கார் ஒன்றை வைத்துள்ளார். அத்துடன் ராயல் என்பீல்டு ஷூட்கன் 650 (Royal Enfield Shotgun 650) பைக்கும் கூட அவரிடம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு, மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி ஜிம்னி கருதப்படுகிறது. ஆஃப் ரோடு சாகச பயணங்களை அடிக்க மேற்கொள்ள கூடியவர்கள், மாருதி சுஸுகி ஜிம்னி எஸ்யூவி காரை தேர்வு செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








