பைக்கை குழந்தை போல் பாத்துக்குறது எல்லாம் ஓவர்! பிரபல நடிகரின் மனதை மயக்கிய ராயல் என்ஃபீல்டு!

ஹர்ஷ்வர்தன் ரானே (Harshvardhan Rane), 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் (Bollywood Actor). ஆரம்பத்தில் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தவர், கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து முழுவதுமாக இந்தி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நம்ம ஊர் நடிகர் அர்ஜூன் (Arjun)-ஐ போன்று ஆக்‌ஷன் திரைப்படங்கள் (Action Movies)-இல் அதிகமாக நடிக்கக்கூடிய நடிகராக ஹர்ஷ்வர்தன் ரானே உள்ளார். இதனாலேயே, கரடு முரடான தோற்றம் கொண்ட கார் & பைக்குகள் என்றாலே இவருக்கு பிடித்துள்ளது.

இதனாலேயே இவரிடம் விலை சற்று குறைவானதாக இருப்பினும் ரக்டு தோற்றம் கொண்ட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) கார் உள்ளது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இவர் வாங்கிய ராயல் என்ஃபீல்டு ஷூட்கன் 650 (Royal Enfield Shotgun 650) பைக்கும் பார்க்க ரக்டு தோற்றத்தில் உள்ளது.

harshvardhan rane s customised royal enfield

சாதாரணமாகவே ராயல் என்ஃபீல்டு ஷூட்கன் 650 பைக் பார்க்க அசத்தலாக இருக்கும். இருப்பினும் அது போதாது என நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானே தனது ஷூட்கன் 650 பைக்கை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளார். இந்த பைக்கை டெலிவிரி பெற்ற சமயத்தில், சில போட்டோகளை பைக்குடன் எடுத்து ஏற்கனவே வெளியிட்டுவிட்ட ஹர்ஷ்வர்தன் ரானே, தற்போது அந்த பைக் உடன் உயர் தரத்திலான கேமராக்கள் உடன் போட்டோஷூட் (Photo Shoot) நடத்தி உள்ளார்.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றியும், ஹர்ஷ்வர்தன் ரானேவின் கஸ்டமைஸ் (Customize) செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றியும் இனி அடுத்தடுத்து பார்க்கலாம். இந்திய சினிமா நடிகர்கள் பலருக்கு எப்படியாவது பாலிவுட்டில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஏனெனில், இந்தியாவிலேயே மிக பெரிய சினிமா துறை என்றால் பாலிவுட் தான் என்பதை நான் கூற வேண்டியது இல்லை.

harshvardhan rane s customised royal enfield

அதன்படி, 2010இல் தெலுங்கு சினிமாவில் முதல் திரைப்பட வாய்ப்பை பெற்ற ஹர்ஷ்வர்தன் ரானேவை தேடி 2012இல் இந்தி திரைப்பட வாய்ப்பு வந்தது. அப்புறம் என்ன... தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்துவந்த நடிகர் ஹர்ஷ்வர்தனின் நடிப்பில் தமிழிலும் 2013ஆம் ஆண்டில் 'நீ எங்கே என் அன்பே' என்கிற திரைப்படம் வெளிவந்தது.

ஆனால், தற்போதுவரையில் ஹர்ஷ்வர்தனின் முதல் மற்றும் கடைசி தமிழ் திரைப்படம் அதுவே ஆகும். இன்னும் சொல்லப்போனால், தெலுங்கு சினிமாவுக்கு கூட முழுக்கு போட்டுவிட்டு மொத்தமாக பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார், நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானே. இத்தகையவர் சமீபத்தில் வாங்கியிருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றும் சாதாரணமானது கிடையாது.

harshvardhan rane s customised royal enfield

சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்யும் விலையுயர்ந்த பைக்குகளுள் ஷூட்கன் 650 ஒன்றாகும். கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஷூட்கன் 650 பைக்கை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் துவங்கியது.

கஸ்டம் ஷெட் (Custom Shed), கஸ்டம் புரோ (Custom Pro), கஸ்டம் ஸ்பெஷல் (Custom Special) என 3 விதமான வேரியண்ட்களில் ஷூட்கன் 650 பைக் விற்பனை செய்யப்படுகிறது. வேரியண்ட்கள் எல்லாமே கஸ்டம் தான். அதாவது, கஸ்டமர்கள் தங்களது பைக்கை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானே வாங்கி இருப்பது விலைமிக்க கஸ்டம் ஸ்பெஷல் வேரியண்ட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஹர்ஷ்வர்தன் ரானே தனது கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஷூட்கன் 650 பைக் உடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டுள்ளதால், இதுதொடர்பான போட்டோஷூட் படங்களும், வீடியோக்களும் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும். ஹர்ஷ்வர்தன் ரானேவை போலவே அவரது ராயல் என்ஃபீல்டு பைக்கும் கம்பீரமான தோற்றத்தில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 4, 2025, 16:25 [IST]
English summary
Harshvardhan rane conducts photoshoot with customised royal enfield shotgun 650 bike
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X