கேமிரா முன்னிலையில் பச்சாக் என முத்தமிட்ட பிரபல நடிகர்.. யாரிடமும் இல்லாத பைக்கை வாங்கிய சந்தோஷம்.. வீடியோ!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் பலர் அடிமையாக உள்ளனர். சில பிரபலங்களும்தான். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது வழக்கமான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரத்யேகமாக தன்னுடைய டேஸ்ட்டிற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்யப்பட்ட பைக் (Custom-Built Bike)கையே அவர் வாங்கி இருக்கின்றார்.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சற்றே காஸ்ட்லியான மற்றும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளாக ஷாட்கன் 650 (Royal Enfield Shotgun 650) உள்ளது. இந்த பைக்கையே சமீபத்தில் இந்தி பட நடிகரான ஹர்ஷ்வர்தன் ரானே வாங்கியிருக்கின்றார்.

இதையே தற்போது கஸ்டமைஸ் செய்து தன்னுடைய பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். அதாவது யாரிடமும் இல்லாத ஓர் தோற்றத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து அத பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். இந்த பைக்கை வாங்கிய குஷியிலேயே அதற்கு முத்தமும் கொடுத்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவையே அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
பார்த்தால் இது ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 என்று மட்டுமல்ல ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புதான் என்று கூட யூகிக்க முடியாத அளவிற்கே மாறுபட்ட தோற்றத்தில் அது மாற்றப்பட்டு இருக்கின்றது. இதற்காக, ஹெட்லைட் தொடங்கி, பாடி பேனல்கள் என பல அகற்றப்பட்டு இருக்கின்றன.
அவற்றிற்கு பதிலாக தனியார் கராஜ் வாயிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாடி பேனல் மற்றும் ஹெட்லைட்டுகளே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் நடிகரின் டேஸ்ட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அலுமினிய பூச்சுக் கொண்ட ஃப்யூவல் டேங்க், ஹெட்லைட், முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
மேலும் பெரிய டிஸ்க்குகளை உள்ளடக்கிய புதிய அலாய் வீல்களே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவையே இந்த பைக்கிற்கு முற்றிலும் தனித்துவமான லுக்கை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. இதைதவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் செய்ததாக தெரியவில்லை. குறிப்பாக, எஞ்சின் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ராயல் என்பலீட்டு ஷாட்கன் ஓர் 650 சிசி ரக பைக் மாடல் ஆகும். இந்த பைக்கில் ட்வின் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 46 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இந்தியாவில் ரூ. 3.59 லட்சம் என்கிற விலையில் இருந்து இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை விலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஓர் நடிகரே ஹர்ஷ்வர்தன் ரானே ஆவார். இதேபோல், இவர் மற்றவர்களுக்கு உதவுவதிலும் பெயர்போனவராக உள்ளார். கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய கான்டினென்டல் ஜிடி பைக்கை விற்று மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிக் கொடுத்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய நபரே தற்போது ஓர் அரிய தோற்றம் கொண்ட டூ-வீலரை வாங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








