டாக்ஸியில் சாதாரணமா வந்தது இவ்ளோ பெரிய ஆளா! ஒரு காலத்துல சர்வரா வேலை செஞ்சவர்! இன்னமும் சிம்பிளா வாழ்றாரு!
இந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணிப்பதைதான் விரும்புகின்றனர். சினிமா நட்சத்திரங்களின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கடந்த காலங்களில் நீங்கள் பலமுறை படித்திருக்கலாம். ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் சினிமா நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் சொகுசு கார்களை கூட ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் வைத்துள்ளனர்.
அப்படி இருக்கும்போது மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர், டாக்ஸியில் வந்து இறங்கினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். மிகவும் ஆச்சரியமான இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, நடிகர் ஹர்ஷவர்தன் ரானே (Harshvardhan Rane) ஆவார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ஹர்ஷவர்தன் ரானே டாக்ஸியில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.
நம் இந்தியாவை பொறுத்தவரையில், மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிறத்தில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால், அவை வர்த்தக வாகனங்கள் ஆகும். அதாவது டாக்ஸிகள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்கள்தான் வர்த்தக வாகனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

கருப்பு நிறத்தில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். ஹர்ஷவர்தன் ரானே வந்து இறங்கிய காரின் நம்பர் பிளேட் இப்படிதான் உள்ளது. எனவே இது டாக்ஸியாகதான் இருக்கும். மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் டாக்ஸியில் வந்து இறங்கியது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.
இத்தனைக்கும் இவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகவும் எளிமையான நடிகர்களில் ஒருவராக ஹர்ஷவர்தன் ரானே அறியப்படுகிறார். இவர் மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் ஆவார்.
உண்மையிலேயே ஹர்ஷவர்தன் ரானேவின் வாழ்க்கை, பலருக்கும் உத்வேகம் அளிக்க கூடியது. ஆரம்ப காலகட்டங்களில் டெலிபோன் பூத்களில் கூட அவர் வேலை செய்துள்ளார். ஹோட்டல்களில் அவர் சர்வராக பணியாற்றியதாகவும் கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், இன்று இந்தியா முழுக்க அறியப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
தற்போது வைரலாக பரவி வரும் ஹர்ஷவர்தன் ரானேவின் வீடியோவில் நாம் பார்ப்பது, டாக்ஸி என்றாலும் கூட, அது என்ன இடம்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அந்த டாக்ஸி டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் விலை உயர்ந்தது என்றாலும் கூட, இந்தியாவின் நிறைய இடங்களில் டாக்ஸியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் ஹோட்டல் நிர்வாகங்கள் பலவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை டாக்ஸியாக பயன்படுத்துகின்றன. தங்கள் வாடிக்கையாளர்களை ஏர்போர்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற இடங்களில் இருந்து பிக்-அப் செய்யவும், டிராப் செய்யவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களை அவை டாக்ஸியாக பயன்படுத்தி கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹர்ஷவர்தன் ரானே எளிமையான நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவரது கார் கலெக்ஸன் (Car Collection) கூட எளிமையானதுதான். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற எளிமையான கார்களைதான் ஹர்ஷவர்தன் ரானே வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








