ஒரு தமிழ் படத்துலதான் நடிச்சிருக்காரு! ஆனா விஜய் மாதிரி கூட்டம் கூடுது! கார் மேல ஏறி ரசிகர்களை பாத்தது அவரா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). தற்போதைய நிலையில் டீசல்/மேனுவல் ஆப்ஷன் உடன் மட்டுமே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் எல்லாம், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு மாதமும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இத்தனைக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சற்று விலை உயர்ந்த கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 18,65,700 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 25,36,200 ரூபாயாக இருக்கிறது. இவை டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.
சற்று விலை உயர்ந்த ஒரு காராக இருந்தாலும் கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா நம்பகத்தன்மை வாய்ந்தது. பல வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், சௌகரியமான பயண அனுபவத்தையும் வழங்குகிறது. இதன் காரணமாகவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை, வாடிக்கையாளர்கள் பலரும் வாங்குகின்றனர்.

இந்த சூழலில், மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர், தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மீது ஏறி நின்று, ரசிகர்களை சந்தித்து விட்டு சென்றுள்ளார். இன்ஸ்டன்ட் பாலிவுட் (Instant Bollywood) தளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகரான ஹர்ஷவர்தன் ரானே (Harshvardhan Rane) ஆவார். ஆந்திர மாநிலத்தில் பிறந்தவரான ஹர்ஷவர்தன் ரானே, தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரை ஒட்டுமொத்தமாக 21 திரைப்படங்களில் மட்டுமே ஹர்ஷவர்தன் ரானே நடித்துள்ளார்.
இதில், தமிழில் நடித்துள்ள ஒரு திரைப்படமும் அடங்கும். கடந்த 2014ம் ஆண்டு வெளியான நீ எங்கே என் அன்பே என்ற திரைப்படத்தில், நயன்தாராவுடன் இணைந்து, ஹர்ஷவர்தன் ரானே நடித்திருந்தார். ஆனால் அதன் பின் அவர் தமிழ் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது.
சமீபத்தில் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஜெய்ப்பூரில் (Jaipur), இது எந்த அளவிற்கு உண்மை? என்பது நிரூபிக்கப்பட்டது. ஹர்ஷவர்தன் ரானே சமீபத்தில் ஜெய்ப்பூர் சென்றிருந்தார். அப்போது அவரை காண மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்து கொண்டிருந்தது. எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மீது ஏறி நின்று, அவர் ரசிகர்களை சந்தித்தார். இந்த வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் ஓடி கொண்டிருந்தாலும் சரி அல்லது நின்று கொண்டிருந்தாலும் சரி, அதன் மேற்கூரையின் மீது ஏறி நிற்பது என்பது நல்ல விஷயம் கிடையாது. இதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் காரின் மேற்கூரை மீது நிற்பர்கள் தடுமாறி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அவர்களுக்கும், காருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








