ஸ்பிளெண்டர் பைக் வைத்திருக்கும் யாருக்கும் இது தோணலயே! நாசாவில் இருக்க வேண்டிய விஞ்ஞானி

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு அதிக பேரால் வாங்கப்படும் பைக் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஸ்பிளெண்டர் பைக்கை அதிக கஸ்டமர்கள் வாங்குவதற்கு முக்கிய காரணம், அதன் அதிகப்படியான மைலேஜ் ஆகும். அதேபோல், ஸ்பிளெண்டர் பைக்குகளை மாடிஃபை (Modify) செய்வதும் எளியதாக உள்ளதால், ஸ்பிளெண்டர் பைக்கை வாங்கி நிறைய பேர் அதனை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்துக் கொள்கின்றனர். ஆனால், இங்கு ஒருவர் நீங்கள் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஸ்பிளெண்டர் பைக்கை மாற்றியுள்ளார்.

பைக் உள்பட இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இருப்பினும் ஒருபக்கம் தொடர்ந்து மாடிஃபிகேஷன்கள் நடைபெற்று கொண்டுத்தான் இருக்கின்றன. ஒரு சில மாடிஃபிகேஷன்கள் படுபயங்கரமாக இருக்கின்றன. அதாவது, இவ்வாறு எல்லாம் எதற்காக வாகனங்களை மாற்றுகின்றனர் என பார்க்கும் எவரொவருக்கும் நினைக்க தோன்றும்.

splendor as drinks vending machine

அதேநேரம், சில மாடிஃபிகேஷன்கள் பார்ப்பதற்கே சுவாரஸ்யமானவைகளாக இருக்கும். அவ்வாறுதான், இங்கு ஒரு இளைஞர் ஏடிஎம் டெபிட் கார்டு (ATM Debit Card)-ஐ நுழைத்தால் குளிர்பானத்தை வழங்கும் வகையில் தனது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை மாற்றிக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அந்த இளைஞரையும் அவரது ஸ்பிளெண்டர் பைக்கையும் காணலாம்.

ஸ்பிளெண்டர் பைக்கின் முகப்பில் ஹெட்லைட் வழங்கப்படும் இடத்தில் கார்டை நுழைக்கும் பகுதியை வழங்கியுள்ள இந்த இளைஞர், அதற்கு மேலே ஏடிஎம் மெஷின் (Machine)-இல் இருப்பதை போன்று பொத்தான்களை கொடுத்துள்ளார். ஏடிஎம் மெஷினில் கூட எண்கள் மட்டும்தான் இருக்கும். ஆனால், இந்த நபர் உருவாக்கியுள்ள ஏடிஎம் பைக்கில் எண்கள் உடன் சேர்த்து சில ஆங்கில எழுத்துகளை கொண்ட பொத்தான்களும் வழங்கப்பட்டுள்ளன.

splendor as drinks vending machine

இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை செயல்முறை உடன் காட்டிய இந்த இளைஞர், முதலில் ஏடிஎம் கார்டு ஒன்றை பைக்கில் நுழைக்கிறார். ஏடிஎம் மெஷினில் கார்டை கொஞ்சம் தூரம் உள்ளே நுழைந்தாலே, மிஷின் தன்னிச்சையாக முழு கார்டையும் உள்ளே இழுப்பதை போன்று, இந்த ஸ்பிளெண்டர் பைக்கிலும் ஹெட்லைட் பகுதியில் வழங்கப்பட்டுள்ள துளையில் ஏடிஎம் கார்டை சற்று உள்ளே தள்ளினாலே முழு கார்டும் ஆட்டோமேட்டிக்காக உள்ளே செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

பின்னர், அதற்கு மேலே வழங்கப்பட்டுள்ள பொத்தான்களுள் சிலவற்றை அழுத்தியதும், அதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள துளையில் இருந்து குளிர்பானம் வெளிவருவதையும், அதனை இந்த நபர் ஒரு டம்ளரில் பிடிப்பதையும் வீடியோவில் பார்க்கலாம். ஆனால், துளையில் இருந்து குளிர்பானம் ஒரே சீரான வேகத்தில் வராததால், அதனை முழுவதுமாக டம்பளரில் பிடிக்க முடியாமல், அதிகப்படியான குளிர்பானம் வீணாக கீழே சிந்துகிறது.

splendor as drinks vending machine

குறிப்பிட்ட அளவு குளிர்பானத்தை வெளியேற்றிய பின்பு உள்ளே நுழைக்கப்பட்ட ஏடிஎம் கார்டு தானாக வெளியே வந்துவிடுகிறது. பொத்தான்களில் கொடுக்கப்பட்டது, குளிர்பானத்திற்கான விலை என இந்த நபர் கூறுகிறார். இந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஹரியானா மாநில நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. அதலால், இந்த வீடியோவும் அந்த மாநிலத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏடிஎம் டெபிட் கார்டை பைக்கில் நுழைத்தால், எவ்வாறு குளிர்பானம் வெளிவருகிறது என்பதை சுத்தமாக அறிய முடியவில்லை. அவ்வளவு பெரிய ஏடிஎம் மெஷினை இவ்வளவு சிறியதான பைக் ஹெட்லைட் பகுதிக்குள் அடைத்துள்ளார் என்றால் இந்த நபர் நிச்சயமாக அசாத்தியமானவரே ஆவார். அல்லது, பார்வையாளர்களை கவர்வதற்காக ஏதேனும் மேஜிக் வேலையாக கூட இது இருக்கலாம். எப்படியிருந்தாலும், பைக்கில் இருந்து ஹெட்லைட் பகுதியை நீக்கியிருப்பது ஏற்கக்கூடியது அல்ல.

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2025, 22:34 [IST]
English summary
Haryana man converted hero splendor bike into cold drinks vending machine
மேலும்... #bike modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X