டாடா கொடுக்க முன்வந்த ரூ.50 கோடி பணத்தை வேண்டாம் என நிராகரித்த எளிய நபர்! ஏன் டாடா பணம் கொடுக்க முன் வந்தாங்க?

இந்தியாவில் வாகன விபத்தால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை தவிர்க்கும் பொருட்டு அரசும், வாகன உற்பத்தி நிறுவனம் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. இதற்கு ஒரு சில வாகன ஓட்டிகளின் அலட்சிய போக்கே முக்கிய காரணமாக இருக்கின்றது.

மது போதையில் வாகனத்தை ஓட்டுவதும், டிராஃபிக் ரூல்ஸை மதிக்காமல் பயணிப்பதும் மற்றும் செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவதும் என போக்குவரத்து விதிமீறல்களை வாகன ஓட்டிகள் அசால்டாக செய்து வருகின்றனர். இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களினாலேயே நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

Software to avoid road accidents

Source: News 18 மேலும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நிலையிலேயே 23 வயதான மோஹித் யாதவ் என்பவர் விபத்துகளை தவிர்க்கக் கூடிய ஓர் சாஃப்ட்வேரே உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தன்னுடைய சிறு வயதில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரின் கண் எதிரிலேயே கார் மற்றும் டிரக் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு மிகப் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த விபத்து சம்பவம் மோஹித் யாதவின் மனதை நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த வண்ணம் இருந்திருக்கின்றது. மேலும், இதுவே விபத்துகளை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் அவரை முன்னோக்கி நகர்த்தி இருக்கின்றது. இந்த செயலி விபத்தை தவிர்ப்பது மட்டுமின்றி எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்குமாம்.

அந்தவகையில், சுமார் 50 சதவீதம் வரை எரிபொருளை சிக்கனப்படுத்த மோஹித் உருவாக்கிய செயலி உதவும் என கூறப்படுகின்றது. இந்த செயலியையே மோஹித்திடம் இருந்து வாங்க டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முன் வந்திருக்கின்றது. ஆனால், அதை கார் உற்பத்தியாளரிடம் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

சுமார் 50 கோடி ரூபாய் வரை அவருக்கு இதற்காக வழங்க டாடா மோட்டார்ஸ் முன் வந்ததாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் மக்கள் நலனைக் கருத்திக் கொண்டு அவர் அந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், இதை அரசாங்கத்திடம் வழங்கப் போவதாகவும் மோஹித் கூறி இருக்கின்றார்.

ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவரே மோஹித் யாதவ் ஆவார். இவர், சண்டிகர் பல்கலைகழகத்தில் பிடெக் பட்டம் முடித்திருக்கின்றார். இந்த படிப்பின் இறுதியாண்டின் போதே இந்த விபத்தை தவிர்க்கும் மற்றும் மைலேஜை அதிகரிக்கும் மென்பொருளை அவர் உருவாக்கி இருக்கின்றார். இந்த மென்பொருள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதையும் தவிர்க்க உதவும்.

இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் இந்த சாஃப்ட்வேர் பொருத்தப்பட்ட வாகனம் ஓட்டுநர் குடித்திருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆக மறுத்துவிடும். இத்தகைய சூப்பரான மென்பொருளையே மோஹித் யாதவ் உருவாக்கி இருக்கின்றார். இந்த மென்பொருள் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு வாகனங்களின் மைலேஜ் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

இந்தியர்கள் பெரும் எதிர்பார்ப்பாக அதிகம் மைலேஜ் தரும் வாகனங்கள் இருக்கின்றன. இத்துடன், பலர் தற்போது அதிக பாதுகாப்பான வாகனங்களை நோக்கி நகர தொடங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஒட்டுமொத்த இந்தியர்களின் தேவையையும் பூர்த்து செய்யும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் சூப்பரான சாஃப்ட்வேரை கண்டுபிடித்திருக்கின்றார். இது பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்தியர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் மிகப் பெரிய தேவையாக அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் இருக்கின்றன. இதை தீர்த்து வைக்கும் வகையில் யாதவ் கண்டுபிடித்திருக்கும் சாஃப்ட்வேருக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதேவேளையில், இது விரைவில் வாகனங்களில் பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Saturday, August 12, 2023, 20:59 [IST]
English summary
Haryana youth invents software to avoid road accidents
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+