இவ்ளோ விஷயம் நடக்குதா... திருடப்படும் கார்கள் அடுத்து என்ன ஆகின்றன? கார்கள் திருட்டில் முதலிடத்தில் டெல்லி!!
கார் திருட்டுகள் எந்தவொரு நாட்டிற்குமே பெரும் தலைவலி தான். இந்தியாவில், உதாரணத்திற்கு 2016 என்ற ஒரு ஆண்டை எடுத்து பார்த்தோமேயானால், இந்த ஆண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான திருட்டு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கார் திருட்டுகளை தடுக்க கோ கனெக்ட் ஒபிடி 2.0 போன்ற ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் திருடப்படும் கார்களில் 100இல் 35 முதல் 40 வரையிலான கார்களுக்கான காப்பீட்டு தொகை அவற்றின் உரிமையாளர்களால் பெற்றவைகளாக உள்ளன.

இவ்வாறு வாகனங்கள் திருட்டிற்காக மட்டுமே வருடந்தோறும் ரூ.1000 கோடி வரையில் காப்பீட்டு நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. இவ்வாறு உரிமையாளர் & காப்பீட்டு நிறுவனம் என இரண்டு பேரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு திருடப்படும் கார்கள் அதன்பின் என்ன ஆகின்றன? என்பது குறித்த முழு விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

2016இல் இந்தியாவில் அதிகளவில் கார் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற பகுதியாக தலைநகர் டெல்லி விளங்குகிறது. டெல்லியை தொடர்ந்து அடுத்த 4 இடங்களில் முறையே உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளன. டெல்லியில் 2016இல் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் திருடுப்போகியுள்ளன. இதற்கடுத்த இடத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 34,000 கார்கள் திருடு போகின்றன.

மஹாராஷ்டிராவில் 22,000க்கும் அதிகமான கார்கள் ஒவ்வொரு வருடத்திலும் திருடப்படுகின்றன. குறிப்பாக, மும்பை & புனே நகரங்களில் தான் அதிக கார் திருட்டு புகார்கள் பதிவாகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் 16,000 கார்கள் திருடு போவதாக, ராஜஸ்தான் இந்த வரிசையில் 4வது இடத்தை பிடிக்கிறது. இந்தியாவில் மிகவும் குறைந்த கார் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் மாநிலமாக கர்நாடகா இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில் உள்ளது.

கர்நாடகாவில் வருடத்திற்கு 10 ஆயிரம் என்ற அளவிலான கார்களே திருடு போகின்றனவாம். இருப்பினும், வருடத்திற்கு 10,000 என்பதும் அதிகம் தான். இதில் மற்றொரு அதிர்ச்சிக்கரமான விஷயம் என்னவென்றால், இந்த கார் திருட்டு சம்பவங்களில் பல இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதுதான். தீர்க்கப்படாமல் இருப்பவைக்கு முக்கிய காரணம், பழைய கார்களில் ஜிபிஎஸ் கருவி இல்லாததே.

ஜிபிஎஸ் கருவி இல்லாத கார்களை கண்டறிவது மிகவும் சவாலானதாக போலீஸார்க்கு விளங்குகிறது. இவ்வாறு திருடப்படும் கார்கள் அடுத்த சில மணிநேரங்களிலேயே முற்றிலுமாக பாகங்களாக மாற்றப்பட்டு, கள்ள சந்தையில் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன என்பதை கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் இவ்வாறுதான் தற்சமயம் திருடப்படும் கார்களில் பெரும்பான்மையானவை மறு விற்பனையாகின்றன.

திருடப்படும் கார்களில் இருந்து என்ஜினை கண்ட்ரோலை செய்யக்கூடிய காரின் முக்கியமான கருவி அதிக விலையில் விற்பனையாகிறது. இதை டார்க்கெட் செய்தே பெரும்பாலான கார் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அதேசமயம் திருடப்படும் கார்களில் இருந்து டயர்கள், என்ஜின்கள், சிஎன்ஜி பாகங்கள் மற்றும் கார் பேட்டரிகளும் கூட கணிசமாக தொகையில் விற்பனையாகின்றன.

இன்னும் சரியாக சொல்லப்போனால், கார் ஜன்னல் கண்ணாடிகள், ஷாக்கர்கள் மற்றும் சைலன்சர் குழாய்களை தவிர்த்து மற்ற பாகங்கள் அனைத்தும் ஒரு கட்டத்திற்குமேல் விற்பனையாகிவிடும். பழுதாகி விற்பனையாகாத பாகங்கள் மறுசுழற்சி முறையில் தைலாங் கடைகளுக்கோ அல்லது வொர்க் ஷாப்களுக்கு செல்லும். திருடப்படும் கார்களை பாதுகாப்பாக மறைத்து வைக்க ஆட்கள் நடமாட்டம் இல்லாத கைவிடப்பட்ட குடியிருப்பு பகுதிகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

டெல்லியில் கூட 3,000 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கேட்பாரற்று லக்சரி கார்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் கண்டறிந்து இருந்தனர். சில திரைப்படங்களில் கூறியிருப்பார்கள்... கார் திருட்டு சம்பவங்களில் ஈடுப்படுவோர் மிக பெரிய நெட்வொர்க் என்று. இந்த நெட்வொர்க்கில் கார்களை திருடுபவர்கள் மட்டுமின்றி, உதிரி பாக டீலர்கள், ஸ்க்ராப் டீலர்கள் & கார் மெக்கானிக்குகளும் அடங்குவர்.

கார்கள் திருடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் திருடர்களிடம் ஸ்பானர்கள் & ஸ்க்ரூ டிரைவர்கள் வெவ்வேறு விதங்களில் இருக்கும். இந்தியாவில் அதிகளவில் திருடப்படும் கார்களாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா ஸ்கார்பியோ & பொலிரோ, ஹுண்டாய் க்ரெட்டா போன்ற எஸ்யூவிகள் விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








