ஹெல்மெட் போட்டுகிட்டு வாடகைக்கு பைக் ஓட்றது இவரா! சவாரி போன கஸ்டமர் உண்மையை உடைத்ததால் நாடே ஆடிப்போயிருச்சு!
பொருளாதார மந்தநிலை காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும், லேஆஃப் (Layoff) நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதாவது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. கூகுள் (Google), அமேசான் (Amazon) மற்றும் (Meta) உள்பட பல்வேறு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஏற்கனவே வீட்டிற்கு அனுப்பி விட்டன.
இதில் மெட்டா என்பது ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஆகியவற்றின் தாய் நிறுவனம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரையில் பெங்களூர் (Bangalore) நகரில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT Companies) பலவும் இன்னமும் ஊழியர்களை நீக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரிசையில் ஹெச்சிஎல் (HCL) நிறுவனத்தால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், பெங்களூர் நகரில் ரேபிடோ (Rapido) நிறுவனத்தின் பைக் டாக்ஸி ஓட்டுனராக மாறியுள்ளார். இதற்கு பின்னால் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
ஸ்ரீனிவாஸ் ரபோலு (Srinivas Rapolu) என்பவர், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சாஃப்ட்வேர் டெவலப்பராக ஸ்ரீனிவாஸ் ரபோலு வேலை செய்து வந்த நிலையில், நடப்பு ஜூன் மாதம், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் மனம் தளர்ந்து விடாமல், ரேபிடோ நிறுவனத்தில் பைக் டாக்ஸி ஓட்டுனராக அவர் உடனடியாக சேர்ந்து விட்டார்.
தனது பைக் டாக்ஸியில் பயணம் செய்பவர்கள் மூலம் தனக்கு மீண்டும் ஏதாவது ஒரு ஐடி நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். ஜாவா டெவலப்பர் பணியிடங்கள் எங்கேயாவது காலியாக இருப்பது தெரியவந்தால், அதற்கு விண்ணப்பித்து, பணியில் சேர வேண்டும் என்பதுதான் ஸ்ரீனிவாஸ் ரபோலுவின் எண்ணம்.
ஸ்ரீனிவாஸ் ரபோலுவின் இந்த எண்ணத்திற்கு உடனடியாக பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. ஆம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் லோவினிஷ் திர் என்பவர், சமீபத்தில் ஸ்ரீனிவாஸ் ரபோலுவின் பைக்கில் பயணம் செய்தார். அப்போது ஸ்ரீனிவாஸ் ரபோலுவின் கதை அவருக்கு தெரியவந்தது.
உடனடியாக ஸ்ரீனிவாஸ் ரபோலு பற்றிய தகவல்களை, ட்விட்டர் (Twitter) மூலம் அவர் வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் எழுதியிருப்பதாவது: நான் சந்தித்த ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுனர் ஜாவா டெவலப்பர் ஆவார். ஹெச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அவர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனவே தொடர்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார்.
அவரது சுய விபர குறிப்பு என்னிடம் உள்ளது. எனவே வேலை இருந்தால் தெரியப்படுத்துங்கள். இவ்வாறு லோவினிஷ் திர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ட்விட்டரில் வைரல் (Viral) ஆக பரவி வருகிறது. லோவினிஷ் திர் மேற்கொண்டுள்ள இந்த நல்ல முயற்சிக்கு பலர் மனப்பூர்வமாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ வேலை தொடர்பான விபரங்களையும் தெரிவித்து கொண்டுள்ளனர். ஆனால் வேறு ஒரு சிலரோ இது விளம்பரத்திற்காக செய்யப்படும் கண்கட்டி வித்தை என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்ரீனிவாஸ் ரபோலுவின் சுய விபர குறிப்பை லோவினிஷ் திர் பகிர்ந்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது உண்மையான நிகழ்வாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் தொடர்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெங்களூர் நகரில் ஓலா (Ola) மற்றும் உபேர் (Uber) நிறுவனங்களில் டிரைவர்களாக இணைந்து வேலை செய்து வரும் பலரை நாங்கள் பார்த்துள்ளோம்.
இதற்கிடையே பெங்களூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் உண்மையில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. பிரபலமான நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருந்து விட்டு, திடீரென வாடகைக்கு பைக் ஓட்டும் சூழல் ஒருவருக்கு உருவாகியிருப்பது, பணி பாதுகாப்பு குறித்த கேள்விகளை பணியாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








