முன்னாள் முதலமைச்சரின் வாரிசு என சொன்னால் நம்பவே முடியல!! வெறும் 3 கார் மட்டும்தான் சொந்தமா இருக்காம்!

கர்நாடகா மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் பாரத பிரதமர் எச்டி தேவகவுடா குடும்பத்தின் கோட்டையாக விளங்கும் சன்னாபட்னா சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தேவகவுடா அவர்களின் பேரனும், மத்திய அமைச்சர் எச்டி குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாரசுவாமி போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் நிகில் குமாரசுவாமியின் சொத்து மதிப்பும், அவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கையும் பலருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான மாநில சட்டமன்றங்களுள் ஒன்று கர்நாடக சட்டமன்றம் ஆகும். கர்நாடகாவில் முழு 5 வருட ஆட்சி நடப்பது அரிதான ஒன்றாக உள்ளது. அப்படியே 5 வருட ஆட்சி நடந்தாலும் குறைந்தது ஒருமுறை ஆவது முதல்வர் பதவி மாறிவிடும். அந்த அளவிற்கு கர்நாடகாவில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை; எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட சமமாக ஆதரவை கொண்டுள்ளன.

nikhil kumaraswamy declared his cars

இதனால், மாநில ஆட்சியில் ஏற்படும் சிறிய பிரச்சனை கூட ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கோ அல்லது முதல்வரை மாற்றும் அளவிற்கோ உருபெற்று விடுகிறது. 2013-18 வரை 5 வருடங்களுக்கு ஒரே முதலமைச்சராக இருந்த சித்தராமைய்யாவின் காங்கிரஸ் ஆட்சி தான் தற்சமயம் கர்நாடகாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2018இல் இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்த பாஜக அதனை முழுவதுமாக 5 வருடங்களுக்கு நடத்தி காட்டியது.

ஆனால், கடந்த 2023இல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியுற்று, காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. 2018 மற்றும் 2023 என 2 தேர்தல்களிலும் முன்னாள் பாரத பிரதமர் எச்டி தேவகவுடாவின் மகனும், முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சரும், தற்போதைய மத்திய கனரக தொழிற்துறை அமைச்சருமாகிய எச்டி குமாரசுவாமி அவரது சொந்த ஊர் கோட்டையான சன்னாபட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து இந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மண்ட்யா தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆகினார். பாஜக அரசு குமாரசுவாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியும் அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் பதவியை ஏற்றதால், 2023 தேர்தலில் தான் வென்ற சன்னாபட்னா சட்டமன்ற உறுப்பினர் பதவியை எச்டி குமாரசுவாமி இராஜினாமா செய்தார். இதனால், இந்த கர்நாடக சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

nikhil kumaraswamy declared his cars

இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை சன்னாபட்னா தொகுதியில் வென்றவரான சிபி யோகேஷ்வர் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் அமைச்சர் எச்டி குமாரசுவாமியின் மகன் நிகில் குமாரசுவாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில், சன்னாபட்னா வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்புமனுவை நிகில் குமாரசுவாமி தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகாவின் முக்கிய அரசியல் குடும்பத்தின் வாரிசான நிகில் குமாரசுவாமியை பற்றிய நிறைய விஷயங்கள் இதில்தான் தெரியவந்துள்ளன. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.113 கோடியாகும். இதில் ரூ.29.34 கோடி மதிப்பிலான சொத்து பரம்பரை வழியாக கிடைத்ததாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கும் நிகில் குமாரசுவாமி, தனது மனைவி மற்றும் மகனின் பெயர்களில் நிலங்களை வாங்கி போட்டுள்ளார்.

nikhil kumaraswamy declared his cars

நிகில் தன்னிடம் உள்ள கார்களாக 1 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், 1 இன்னோவா கிரிஸ்டா, 1 ரேஞ்ச் ரோவர் மற்றும் 2 கேரவன்களை குறிப்பிட்டுள்ளார். ரேஞ்ச் ரோவரை தவிர்த்து விலையுயர்ந்த கார்கள் எதுவும் இவரிடம் இல்லையாம். தேர்தல் பணிகளுக்காக நிகில் குமாரசுவாமி 2 கேரவன்களை வாங்கி வைத்துள்ளார். இதனால், இனி சில வாரங்களுக்கு பெரும்பாலும் கேரவன்களில் தான் பயணிப்பார் என்பதை அறிய முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னாள் பாரத பிரதமரின் பேரன் மற்றும் முதலமைச்சரின் மகனிடம் மொத்தமாகவே வெறும் 3 கார்கள் மட்டுமே இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. கார்களை காட்டிலும் கேரவன்களில் பயணம் செய்வது இன்னும் அதிக சவுகரியமானது என்றாலும், எல்லா இடங்களுக்கும் கேரவனை கொண்டு செல்வது இயலாத காரியம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 13:00 [IST]
English summary
Hd kumaraswamy son nikhil declared his owned cars details in by election nomination
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X