பள்ளி மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்! கேரளாவில் நடந்த நெழ்ச்சி சம்பவம்!

கேரள மாநிலத்தில் அரசு துவக்க பள்ளியில் உள்ள மாணவர்களை தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் விமானத்தில் கூட்டிச் சென்றுள்ளார். தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஆசையை தனது சொந்த செலவில் தலைமை ஆசிரியர் நிறைவேற்றியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் நாம் எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசை இருக்கும். இன்று பலர் சம்பாதித்த பின்பு தங்கள் சிறு வயது கனவான விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்திருப்பார்கள். பலர் இன்னும் அந்த ஆசையை நிறைவு செய்யாமல் அதற்கான தருணம் வரவேண்டும் என காத்திருப்பார்கள். நாம் சிறுவயதில் வானில் விமானம் பறந்தாலே எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு விமானத்தை வேடிக்கை பார்க்க சென்று விடுவோம்.

headmaster takes students on flight

இந்த நிலையில் கேரள மாநிலம் நாரன்மொழி பகுதியில் உள்ள பருவா அரசு துவக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் அணில் போஸ் அவரது மனைவி அணிலா மெராட் ஆகியோர் தங்கது பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்களது கனவான விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொடுத்துள்ளார். அதுவும் தனது சொந்த செலவில் இதை செய்துள்ளார்.

அணில் போஸ் அவரது பள்ளியில் படிக்கும் 32 மாணவ மாணவிக் 8 ஆசிரியர்கள் 4பள்ளி பணியாளர்களை கொச்சின் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் ஏற்றி திருவனந்தபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்று அங்குள்ள விமான நிலையம் சட்டமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவ மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். மேலும் அங்குள்ள சில சுற்றுலாத்தலங்களுக்கும் அழைத்து சென்று மீண்டும் பத்தனம்திட்டாவிற்கு திரும்பியுள்ளார்.

headmaster takes students on flight

பள்ளி மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தலைமை ஆசிரியரை தற்போது நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற குழந்தைகளின் கனவை இந்த தலைமையாசிரியர் நினைவாக்கியுள்ளார். இதில் குறிப்பிட வேண்டியது இந்த பள்ளி எஸ்டி இன மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளியாகும்.

நம்மில் பலர் குழந்தையாக இருக்கும்போது வாழ்நாளில் ஒரு தடவையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என நினைப்போம். அப்படி தான் இன்றைய குழந்தைகளும் பலர் கனவில் இருப்பார்கள். இந்த கனவுகளை எல்லாம் நிறைவேற்ற இந்த தலைமையாசிரியர் அணில் போஸ் எடுத்த முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியது. குழந்தைகளின் இந்த கனவுகளை நினைவாக்க ஆசிரியர்கள் பல்வேறு முனைப்புகளை முன்னெடுப்பது நிச்சயம் சிறப்பான விஷயம் தான்.

headmaster takes students on flight

சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் உள்ள கதாநாயகன் தனது ஊரில் உள்ள மக்களை ஏழை எளிய மக்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் விமான நிறுவனம் ஒன்றை துவங்குவார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது கேரளாவிலும் நடந்துள்ளது.

தலைமையாசிரியர் அணில் போஸ் தனது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்வதற்காக அவர் செலவு செய்த தொகை என்பது ரூபாய் 2,11,800 ஆகும். இந்தத் தொகைக்கான டிக்கெட்டை அவர் தனது சொந்த செலவிலேயே செய்துள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்படுகிறது. இந்த விமான பயணத்தில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாக்கியசாலிகள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை பகிரும் பலர் தாங்கள் பள்ளி படிக்கும்போது இப்படியான தலைமையாசிரியர் யாரும் இல்லையே என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தங்களுக்கும் பள்ளி படிக்கும் போது இப்படியாக விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. பலருக்கு இந்த கனவு நிறைவேறி இருந்தாலும் இன்னும் பலருக்கு இது வெறும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. இப்படியான கனவுகளை கொண்டிருந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி தலைமை ஆசிரியர் எடுத்த இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 2, 2023, 13:10 [IST]
English summary
Headmaster took students on flight in kerala on his own expense
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X