இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

கார்களில் வழங்கப்படும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதி குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

புதிய கார் வாங்கும்போது அதிநவீன வசதிகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டனர். இந்த வசதிகள், நமது பயணத்தை சுலபமாக்குகின்றன. அப்படி நமது பயணத்தை சுலபமாக்கும் வசதிகளில் ஒன்று ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே (Heads Up Display). இதனை சுருக்கமாக ஹெச்யூடி (HUD) என அழைக்கின்றனர்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஏராளமான கார்களில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என்றால் என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அத்துடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியின் சாதகங்கள் மற்றும் பாதகங்களையும் இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என்பது காரின் டேஷ்போர்டின் மீது பொருத்தப்பட்டிருக்கும் ஒரு திரை. இது காரை பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கும். அதாவது காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மூலம் நீங்கள் பார்க்க கூடிய முக்கியமான தகவல்களை, இந்த திரையே காட்டி விடும்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

எனவே முக்கியமான தகவல்களை பெறுவதற்கு நீங்கள் பார்வையை எங்கும் திருப்ப வேண்டியதில்லை. உங்கள் முன்பு இருக்கும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மூலமாகவே நீங்கள் முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். டிரைவர் தலை நிமிர்ந்த நிலையிலேயே காரை ஓட்டுவதற்கு இந்த வசதி உதவுகிறது. எனவேதான் இதற்கு ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

கார் ஓட்டும்போது பார்க்க வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் டிரைவர் தலையை நிமிர்த்திய நிலையிலேயே பார்க்க முடியும். காரின் வேகம், நேவிகேஷன் போன்ற தகவல்களை எல்லாம் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவில் பார்க்கலாம். ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவை நீங்கள் 'கஸ்டமைஸ்' செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே எந்த லுக்கில் இருக்க வேண்டும்? என்பதை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மூலமாக நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவில் தோன்றும் பல்வேறு தகவல்களின் அளவு மற்றும் வண்ணம் எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே இருந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

முக்கியமான தகவல்களை பெறுவதற்கு நீங்கள் தலையை அங்கேயும், இங்கேயும் திருப்பி கொண்டிருப்பதை இது தடுக்கிறது. இதுதான் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவின் முக்கியமான பலன். நீங்கள் பார்வையை அங்கும், இங்கும் திருப்பி கொண்டிருந்தால் உங்களின் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

ஆனால் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உங்கள் கவனம் சிதறுவதை தடுத்து, சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. எனவே இதனை முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகவும் குறிப்பிடலாம். மேலும் டிரைவர் சோர்வு அடைவதையும் கூட ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஓரளவிற்கு குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

தகவல்களை பெற காருக்குள் அங்கும், இங்கும் பார்வையை திருப்பி கொண்டே இருந்தால் டிரைவர் சோர்வு அடையலாம். ஆனால் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதி இருந்தால், டிரைவரால் சாலையில் அதிக கவனம் செலுத்த முடியும். அதே நேரத்தில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியில் குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

காரின் விலையை அதிகரிக்க செய்வதுதான் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவின் முக்கியமான குறைபாடு. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியை கார் நிறுவனங்கள் வழங்கினால், உற்பத்தி செலவு அதிகரிக்கும். இதன் காரணமாக காரின் விலையும் உயர்ந்து விடும். விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இது ஒரு முக்கியமான குறைபாடுதான்.

இந்த வசதியில் நல்லது, கெட்டது என ரெண்டுமே இருக்கு... ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அப்படினா என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே தங்களது கவனத்தை சிதறடிப்பதாகவும் ஒரு சில டிரைவர்கள் கூறுகின்றனர். நேருக்கு நேராக தகவல்களை பார்த்து கொண்டே இருப்பதால், கவனம் சிதறுகிறது என்பது ஒ சிலர் டிரைவர்களின் கருத்து. எனவே ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியின் சௌகரியத்தை பயன்படுத்தி கொள்வது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Heads up display advantages disadvantages
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X