அவரு யார்னு தெரியுமா மொதல்ல! அரசு பஸ்ல ஊருக்கு போனது இவ்ளோ பெரிய ஆளா! வழியனுப்ப பாதுகாப்பு படையே வந்துருச்சு!

கர்நாடக மாநிலத்தில் முதல் அமைச்சர் சித்தராமையா (Siddaramaiah) தலைமையிலான காங்கிரஸ் (Congress) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையாவின் அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக (Karnataka Health Minister) இருப்பவர் தினேஷ் குண்டு ராவ் (Dinesh Gundu Rao). இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC - Karnataka State Road Transport Corporation) சொந்தமான பஸ்ஸில் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இது படுக்கை வசதி கொண்ட பஸ் ஆகும். அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் லோயர் பெர்த்தில் பயணம் செய்துள்ளார்.

Dinesh Gundu Rao Travelled In KSRTC Bus

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore) இருந்து மங்களூர் (Mangalore) வரை அவர் இந்த பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். அரசு பஸ் பயணம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது சுமார் 350 கிலோ மீட்டர் பயணம் ஆகும். அமைச்சர் ஒருவர் இவ்வளவு தூரம் அரசு பஸ்ஸில் பயணம் செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த வைரல் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இது அமைச்சர் தினேஷ் குண்டு ராவின் எளிமையை காட்டுவதாகவும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அமைச்சர்கள் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள், பெரும்பாலும் சொகுசு கார்களிலும், விமானங்களிலும்தான் பயணம் செய்வார்கள்.

KSRTC Bus

ஆனால் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அதற்கு எதிர்மாறாக அரசு பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அரசு பஸ் பயணங்களை மேற்கொள்வதை ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என்பதிலும் துளியும் சந்தேகமில்லை. எனவே சமூக வலை தளங்களில் அமைச்சர் தினேஷ் குண்டு ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அமைச்சர் தினேஷ் குண்டு ராவின் இந்த செயல், பொதுமக்கள் மத்தியில், பொது போக்குவரத்து மீதான ஆர்வத்தையும் அதிகமாக்கும் என நாங்கள் கருதுகிறோம். இன்றைய தேதியில் பொது போக்குவரத்து பயணங்கள் இந்தியாவிற்கே மிகவும் அவசியமான ஒன்றாகும். கார் போன்ற சொந்த வாகனங்களுக்கு பதிலாக பஸ், ரயில் போன்ற வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொது போக்குவரத்து பயணங்கள் என்கின்றனர்.

மக்கள் சொந்த வாகனங்களுக்கு பதில், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாடும் கூட குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய முன் வர வேண்டும் என பொதுமக்களை, அரசு வலியுறுத்தி வருகிறது.

அமைச்சர் தினேஷ் குண்டு ராவோ, ஒரு படி மேலே சென்று, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். அமைச்சரே அரசு பஸ்ஸில் பயணம் செய்திருப்பதால், இனி வரும் காலங்களில், பொதுமக்கள் பலரும் அரசு பஸ்களில் பயணம் செய்ய அதிக ஆர்வத்துடன் முன்வருவார்கள் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 13:30 [IST]
English summary
Health minister dinesh gundu rao travelled from bangalore to mangalore in ksrtc bus viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+