நாலே முக்கால் டன்னில் ஒரு மோட்டார்சைக்கிள்... பார்த்துடுவோமே!!

Posted By:

பொதுவாக மோட்டார்சைக்கிள்கள் வடிவமைக்கும்போது எளிதாக நகர்த்துவதற்கும், ஓட்டுவதற்கு லாவகமாக இருக்கும் விதத்திலும் வடிவமைக்கின்றனர். அத்துடன், மைலேஜை கணக்கிடும்போது முடிந்தவரை எடையை குறைக்க தயாரிப்பாளர்கள் முற்படுகின்றனர்.

ஆனால், நாலேமுக்கால் டன்னில் ஒரு மோட்டார்சைக்கிளை வடிவமைத்து அதனை ஓட்டும் பக்குவத்தில் வடிவமைத்துள்ளனர் ஜெர்மனியை சேர்ந்த பைக் ஆர்வலர்கள் சிலர். அந்த மோட்டார்சைக்கிளை பற்றி சில சுவையானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பாளர்கள்

வடிவமைப்பாளர்கள்

ஜெர்மனியை சேர்ந்த டிலோ நீபெல் தலைமையிலான குழுவினர்தான் இந்த மோட்டார்சைக்கிளை வடிவமைத்தனர்.

எடை

எடை

இந்த மோட்டார்சைக்கிள் 4.749 டன் எடை கொண்டது. அதாவது, 4 கார்களின் சராசரி எடைக்கு நிகரானது.

ஹேண்டில்பார்

ஹேண்டில்பார்

இந்த மோட்டார்சைக்கிளை திருப்புவதற்காக 2 மீட்டர் நீளமுடைய ஹேண்டில்பார் பொருத்தப்பட்டுள்ளது.

பீரங்கி எஞ்சின்

பீரங்கி எஞ்சின்

ரஷ்ய டி55 பீரங்கியின் 800எச்பி பவர் கொண்ட எஞ்சினை வாங்கி பொருத்தியுள்ளனர்.

வடிவம்

வடிவம்

இந்த மோட்டார்சைக்கிள் 5.28 மீட்டர் நீளமும், 2.29 மீட்டர் உயரமும் கொண்டது.

ஓர் ஆண்டு கட்டுமானம்

ஓர் ஆண்டு கட்டுமானம்

வெல்டர்கள் மற்றும் பைக் மெக்கானிக்குகள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இணைந்து ஓர் ஆண்டு உழைப்பில் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கினர்.

ராணுவ வாகன பாகங்கள்

ராணுவ வாகன பாகங்கள்

இந்த பைக்கில் பெரும்பான்மையான பாகங்கள் ராணுவ வாகனங்களிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளனர். மேலும், சைடு காரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இந்த மோட்டார்சைக்கிள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A group of bike enthusiasts headed by Tilo Niebel of the East German village of Zillah has shown his motorbike monster assembled by hand.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark