முற்றிலும் வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500!

Written By:

இதுவரை பல கஸ்டமைஸ் கார் மாடல்கள் பற்றிய விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படித்திருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவையாக மாற்றங்கள் செய்யப்பட்டு நம்மை வசீகரித்து வருகின்றன. ஆனால், அதில் ஒரு சில மாடல்கள் நிச்சயம் புதுமையாகவும், மிகவும் வித்தியாசமாகவும் கூடுதல் கவனத்தை பெறுகின்றன.

அதுபோன்று, ஆக்சஸெரீகளை உடல் முழுவதும் அள்ளிப் போட்டுக் கொண்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஒரு மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் படங்களையும், தகவல்களையும் இப்போது உங்கள் பார்வைக்கு விருந்தாக்குகிறோம்.

ஆஃப்ரோடு ஆர்வலரின் கைவண்ணம்...

ஆஃப்ரோடு ஆர்வலரின் கைவண்ணம்...

பெங்களூரில் உள்ள ஹாட் ஸோன் ரேஸிங் டெக்னாலஜி நிறுவனத்தின் உரிமையாளரான ஸுபைர் அப்துல்லா என்பவர்தான் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500வை இவ்வாறு மாற்றிக் காட்டி அசத்தியிருக்கிறார்.

செல்லப் பெயர்

செல்லப் பெயர்

தனது கஸ்டமைஸ் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500வை இன்ட்ரெபிட் என்ற செல்லப்பெயரிட்டு அழைக்கிறார் ஸுபைர். இவர் ஆஃப்ரோடு பிரியரும் கூட.

 மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ்

ஸுபைர் அப்துல்லாவின் மஹிந்திரா எக்ஸ்யூவி500 முழுவதும் கருப்பு வண்ணத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு, அதில் சிவப்பு வண்ணக் கலவை பாகங்களால் ஹைலைட் செய்யப்பட்டிருக்கிறது.

 பிரம்மாண்டம்...

பிரம்மாண்டம்...

இந்த எஸ்யூவியின் பிரம்மாண்டத்திற்கும், பார்த்தவுடன் கவர்வதற்குமான முக்கிய அம்சங்களில் ஒன்று இதன் பிரம்மாண்ட டயர்கள்தான். ரிம்களில் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

முகப்பு மாற்றம்

முகப்பு மாற்றம்

பானட்டில் ஏர்ஸ்கூப்புகளுடன் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து, க்ரில் அமைப்பும் படுக்கை வாட்டிலான வளைந்த சட்டங்களுடன் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பின்புறத்தில் எல்இடி விளக்குகள் மறைந்து நிற்கின்றன. இரவு நேரங்களில் ஒளிர்ந்து தன்னுடைய இருப்பிடத்தை காட்டி, பார்ப்போரை வசீகரிக்கச் செய்கின்றன.

 இதர மாறுதல்கள்

இதர மாறுதல்கள்

ஆஃப்ரோடு செல்லும்போது சேற்றில் சிக்கினால் இழுப்பதற்கான கொக்கி மற்றும் பிற வாகனங்களை இழுப்பதற்கான வின்ச் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதுடன், INtrepid என்ற பெயர் பலகையும் இடம்பெற்றிருக்கிறது. நம்பர் ப்ளேட் இடம் மாற்றம் கண்டிருக்கிறது.

 கூடுதல் ப்ளாஷ் லைட்டுகள்

கூடுதல் ப்ளாஷ் லைட்டுகள்

வின்ட்ஷீல்டில் மேலே ப்ளாஷ் லைட் மற்ரும் கூரை மேலே, கூடுதல் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சாதாரண மாடலில் இருக்கும் அதே புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் தக்க வைக்கப்பட்டுள்ளன. ஆழமான நீர் நிலைகளை கடக்கும்போது எஞ்சினுக்கு காற்று கிடைக்காமல் மூச்சுத் திணறுவதை தவிர்க்கும் விதத்தில், ஸ்நோர்க்கெல் குழாய் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கிறது.

 பக்கவாட்டு பாதுகாப்பு

பக்கவாட்டு பாதுகாப்பு

ஆஃப்ரோடு செல்லும்போது மரக் கிளைகளால் கண்ணாடி ஜன்னல்களில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில், வலுவான குழாய் பாதுகாப்பாக இருக்கும் விதத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த குழாய் மீதும் பக்கவாட்டுப் பகுதிகளை தெளிவாக இருக்கும் விதத்தில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

 ஜாக்...

ஜாக்...

பின்புறத்தில் ஜாக் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கூடுதலாக டீசல் கேன் ஒன்றும் கூடுதல் எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் ரியர் ஸ்பாய்லர் ஒன்றும் டிராக்குகளில் ஓட்டும்போது பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்புறத்தில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான கேரியரும், அதில் ஏறி பொருட்களை வைப்பதற்கான இரும்பு ஏணி பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இன்டீரியரிலும் மாற்றங்களும், கூடுதல் ஆக்செஸரீகளும் இடம்பெற்றிருக்கின்றன. கருப்பு- பழுப்பு என இரட்டை வண்ணக்கலவையிலான இன்டீரியர், ஸ்போர்ட்ஸ் பெடல்கள், புதிய கியர்நாப் போன்றவை இடம்பெற்று இருக்கின்றன. எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என தெரிகிறது.

உங்களது கருத்து...

உங்களது கருத்து...

இந்த கஸ்டமைஸ் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பற்றிய உங்கள் மனதில் சட்டென தோன்றும் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

Photo Credit: Sajith Sajeev 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Heavily Modified Mahindra XUV500 from Bangalore.
Story first published: Monday, February 22, 2016, 12:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark