ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

மேற்கு வங்கத்தை தொடர்ந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் பாஜக ஆளும் குஜராத்தும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

உலகில் சாலை விபத்துக்கள் அதிகமாக அரங்கேறி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதில், ஒரு ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனி கவனம் செலுத்தினார். இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், முன்பு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல் அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையையும் மத்திய அரசு தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

போக்குவரத்து விதிமீறல்களுக்கான உயர்த்தப்பட்ட அபராத தொகைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி (நேற்று முன் தினம்) முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அபராத தொகை மிக கடுமையானது என்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீற மாட்டார்கள் என்பது அவர்களின் கருத்து.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

அதே சமயம் மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மறுபக்கம் மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது ஊழலுக்கு வழிவகுத்து விடும் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி, வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடக்கூடும் என்பது அவர்களின் கருத்து.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

எனவே வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த காரணத்திற்காக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்க மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

ஊழலுக்கு வித்திடும் என்பதால், புதிய மோட்டார் வாகன சட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது. இந்த வரிசையில் தற்போது மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளும் இணைந்துள்ளன.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

இதை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று மட்டும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குஜராத்தில் பாஜகவின் ஆட்சிதான் தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத்தே மத்திய அரசின் நடவடிக்கையுடன் முரண்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

குஜராத் மாநில அரசை பொறுத்தவரை, உயர்த்தப்பட்ட அபராத தொகைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்த பிறகே, புதிய அபராத தொகைகளை குஜராத் அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

ஆனால் இதற்கு எவ்வளவு வாரங்கள் அல்லது எவ்வளவு மாதங்கள் ஆகும்? என்பது தெளிவாக தெரியவில்லை. அதேபோல் புதிய விதிமுறைகளை குஜராத் அரசு ஓரளவிற்கு அமலுக்கு கொண்டு வருமா? அல்லது அறிக்கை வரும் வரை பழைய விதிமுறைகளே தொடரப்படுமா? என்பதும் தெளிவாக தெரியவில்லை. மத்திய பிரதேச மாநில அரசும் கிட்டத்தட்ட இதேபோன்றதொரு நடவடிக்கையைதான் எடுத்துள்ளது.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

புதிய விதிமுறைகள் தொடர்பாக ஆராய கமிட்டி ஒன்றை மத்திய பிரதேச மாநில அரசு நியமித்துள்ளது. அந்த கமிட்டியும் மத்திய பிரதேச அரசு அறிக்கையையும் கேட்டுள்ளது. ஆனால் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அப்படியே அமல்படுத்தப்படுமா? அல்லது அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதை மத்திய பிரதேச அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

இதுதவிர புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ராஜஸ்தான் அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அங்கு புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவது போல் தெரியவில்லை. ஏனெனில் அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், அது சாதாரண வாகன ஓட்டிகள் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என ராஜஸ்தான் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

எனவே புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல் பஞ்சாப் அரசும் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அபராத தொகைகள் மிக கடுமையானது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. போலீசார் அதிக லஞ்சம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதாலேயே மேற்கண்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

ஆனால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து விட்டது. டெல்லியை பொறுத்தவரை, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் போக்குவரத்து போலீசார் பெரும்பாலான விதிமுறை மீறல்களுக்கு கோர்ட் சலானை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான விதிமுறை மீறல்களுக்கு வாகன ஓட்டிகள் அங்கு ஆன்லைன் மூலமாகவே அபராதத்தை செலுத்த வேண்டும்.

ஆரம்பித்து வைத்த மம்தா பானர்ஜி... குஜராத்தே எதிராக திரும்பியது... மோடி அரசுக்கு பெரும் தலை வலி...

ஸ்பாட்டிலேயே அபராதத்தை செலுத்த தேவையில்லை. விபத்துக்களை குறைக்கும் நோக்கில்தான், அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது. ஆனால் மேற்கண்ட மாநில அரசுகள் தெரிவிப்பது போல், போலீசார் வசூல் வேட்டை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் மறுத்து விட முடியாது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Heavy Fines For Traffic Violations: West Bengal, Rajasthan, Punjab, Madhya Pradesh, Gujarat oppose New Motor Vehicles Act. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X