மொத்தமா முடிச்சிவிட்டீங்க போங்க... இனி வாழ எதுவும் இல்லை - விரக்தியின் உச்சத்தில் கார் ஓனர்!!

குஜராத் (Gujarat) மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதையும், அதனால் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கை பற்றியும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கனமழையினால் குறைந்தது எதாவது ஒரு மாநிலம் பலத்த சேதாரங்களை சந்திக்கிறது. கனமழையினால் வாகனங்கள் பழுதடைகின்றன. இதனால், ஒவ்வொரு மழை காலத்திற்கு பின்பும் பலருக்கு ஆயிரக்கணக்கில் பணம் வீணாகிறது. ஆனால் தற்போது குஜராத்தில் ஒருவர் தன்னிடம் இருந்த ஆடி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் கார்களை மழை வெள்ளத்தில் இழந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

மழை எந்த அளவிற்கு நமக்கு நன்மை தருகிறதோ, அதே அளவிற்கு சில சமயங்களில் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக, அதிகளவில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாகனங்கள் பல மணிநேரத்திற்கு மழைநீர் வெள்ளத்தில் நிற்பதால் சேதமடைகின்றன.

heavy rainfall in gujarat

அத்தகைய சமயங்களில் கார் ஓனர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவ்வாறான சூழல் இங்கு ஒரு கார் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்தவரான இந்த நபரிடம் ஆடி கார், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்ட கார்கள் உள்ளன. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இவை அனைத்தும், கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனை வருத்தத்துடன் அந்த நபர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியில் இருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழைக்கு இதுவரையில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் உள்பட இந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வீடுகளிலும், சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

heavy rainfall in gujarat

அந்த வகையில், இந்த செய்தியில் நாம் பார்க்கும் நபரது கார்களையும் பொனெட் வரையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள அந்த நபர், "இனி வாழ எதுவும் இல்லை" என பதிவிட்டுள்ளார். இதில் இருந்து அவரது விரக்தியை உணர முடிகிறது. ஏனெனில், அவரது கார்கள் ஒவ்வொன்றும் விலையுயர்ந்தவை ஆகும்.

இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால், காரினுள் நீர் புகுந்திருப்பதற்கு அதிக வாய்புள்ளது. தற்சமயம் உருவாக்கப்படும் மாடர்ன் கார்கள் பல்வேறு விதமான எலக்ட்ரிக்கல் பாகங்களை கொண்டுள்ளன. இதில் சில எலக்ட்ரிக்கல் பாகங்கள் என்ஜின் உடன் இணைக்கப்படுகின்றன. ஆதலால், மழைநீரால் அந்த எலக்ட்ரிக்கல் பாகங்கள் பழுதடைந்தால், என்ஜின் செயலிழந்து கார் இயங்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

heavy rainfall in gujarat

பல நாட்களுக்கு மழைநீர் தேங்கி கிடந்தால், அவை காரின் சஸ்பென்ஷன், பிரேக் உள்ளிட்டவற்றை அரிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், காரினுள் புகுந்த மழைநீர் அங்கிருக்கும் உலோகங்களை துருப்பிடித்தலுக்கு உள்ளாக்க கூடும். இதையெல்லாம் தவிர்க்க, காரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவிடலாம் என காரின் கதவை திறப்பதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், சிறு துளைகள் வழியாக காரினுள் கசிந்துக் கொண்டிருந்த மழைநீர், நீங்கள் கதவை திறந்தால் அதிகளவில் காரினுள் புகுந்துவிடும்.

காரை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவிடுவீர்கள் என்றால், காரினுள் அதிக நீர் புகுந்தாலும் பிரச்சனையில்லை. இந்த பிரச்சனைகளில் எல்லாம் சிக்க கூடாது என்றால், கனமழைக்கு வாய்ப்புள்ளது என செய்தி வெளியான உடனேயே உங்களது வாகனங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவிடுவது சிறந்தது. குஜராத்தில் மட்டுமின்றி, ஹரியானாவின் குருக்கிராமிலும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நிறைய வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வருட இறுதி மாதங்களில் மழை பெய்யும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஒரு சில வருடங்களில் அது கனமழையாக பெய்து, இவ்வாறு இடுப்பளவுக்கு சாலையில் நீர் தேங்குவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆதலால், புதியதாக கார், பைக் போன்ற வாகனங்களை வாங்குகிறீர்கள் என்றால், அதனை வீட்டில் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சரிப்பார்க்கவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2024, 19:37 [IST]
English summary
Heavy rainfall in gujarat man lost his audi ford ecosport and maruti ciaz
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X