டாடா எலக்ட்ரிக் கார் வாங்குனதுல இது ஒரு நல்ல விஷயம்! இனி வர போகும் எல்லா காரும் இப்படித்தான் இருக்கும்!!

இந்தியா உள்பட மொத்த உலகின் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை சார்ந்துதான் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. எலக்ட்ரிக் வாகனங்களின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அவற்றை நடமாடும் ஸ்விட்ச் பாக்ஸ் (Switch Box) ஆகவும் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, ஒரு எலக்ட்ரிக் காரில் இருந்து இன்னொரு எலக்ட்ரிக் காருக்கு சார்ஜை பரிமாறிக் கொள்ளும் வசதிகள் கூட வந்துவிட்டன. அப்படியிருக்க, இங்கு ஒருவர் தனது டாடா கர்வ்.இவி (Tata Curvv.ev) எலக்ட்ரிக் கார் மூலம் டீ (Tea) போட்டு குடித்து குடித்துள்ளார். இதைவிட, அவர் இந்த செயலில் செய்த இடம்தான் இன்னும் முக்கியமானதாகும். வாருங்கள் அதனை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக இருக்கும் கார் நிறுவனங்களுள் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகும். கடந்த பல வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடைசியாக கர்வ்.இவி என்கிற கூபே ஸ்டைலிலான எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது.

tata curvv ev driver makes tea

ரூ.17.50 லட்சத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த கர்வ்.இவி அதன் கவர்ச்சிக்கரமான தோற்றத்தினாலும், அதிக மைலேஜினாலும் மக்கள் மத்தியில் விரைவாகவே கவனத்தை பெற ஆரம்பித்துவிட்டது. அவ்வாறு, ராஜஸ்தானில் டாடா கர்வ்.இவி எலக்ட்ரிக் காரை வாங்கிய ராம் கோதாவால் என்பவர் அதனை ஹிமாச்சல் பிரதேசத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஹிமாச்சல் உள்பட இமயமலை தொடரை ஒட்டியுள்ள பல பகுதிகளில் அதிகமாக பனி பொழிந்து வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

இதனால், அப்பகுதிகள் தற்சமயம் ரம்மியமாக காட்சியளித்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. சாலைகளில் பனி பொழிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். இருப்பினும், இந்த பனி பொழிவை பார்ப்பதற்காகவே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஹிமாச்சல் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களுக்கு படையெடுத்து வருவதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு பல மணிநேரத்திற்கு வாகன ஓட்டிகள் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

tata curvv ev driver makes tea

அவ்வாறு, ராம் கோதாவாலின் டாடா கர்வ்.இவி காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. காரை முன்னால், பின்னால் என எங்கும் கொண்டு செல்ல முடியாமலும், காரை தனியாக விட்டு செல்லவும் முடியாமலும் ராம் கோதாவால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார். பின்னர், காருக்குள் இருந்தப்படியே ஓய்வெடுக்க நினைத்த போதுதான் அவருக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றியுள்ளது.

அதாவது, கர்வ்.இவி எலக்ட்ரிக் காரின் மின்சாரத்தை உபயோகப்படுத்தி, டீ போட்டு குடிக்கலாம் என்பதாகும். இவ்வாறு அவசரத்திற்கு தேவைப்படும் என்பதற்காகவே வீட்டில் இருந்து டீ போடும் மிஷனை காரில் கொண்டுவந்துள்ளார். சரியான அடாப்டர் (Adapter)-ஐ கொண்டிருந்தால், கர்வ்.இவி எலக்ட்ரிக் காரை கொண்டு டீ போடும் மிஷனை மட்டும் அல்ல, தொலைக்காட்சி, இண்டக்‌ஷன் குக்டாப்ஸ் (Induction Cooktops), காஃபி மிஷன்ஸ் (Coffee Machines) போன்றவற்றையும் இயங்க வைக்கலாம்.

tata curvv ev driver makes tea

அதுமட்டுமின்றி ஏற்கனவே கூறியதுபோல், ஒரு எலக்ட்ரிக் காரில் இருந்து இன்னொரு எலக்ட்ரிக் காருக்கு சார்ஜை பரிமாற்றிக் கொள்ளும் வசதியும் கர்வ்.இவி காரில் உள்ளது. இவ்வாறு அதிக பனி பொழியும் பகுதிகளுக்கு 4x4 டிரைவ் சிஸ்டம் கொண்ட வாகனங்கள் தான் சரியானவை. ஆனால், கர்வ்.இவி ஆனது 4x2 டிரைவ் சிஸ்டம் கொண்ட வாகனம் ஆகும். இத்தகைய வாகனங்களை பனியில் ஓட்டும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து பனி விழுந்துக் கொண்டே இருக்கும் இவ்வாறான பகுதியில் சூடான டீ மிகவும் இதமாக இருக்கும். இதற்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காரில் இருந்தே மின்சாரம் எடுத்துக் கொள்ளலாம் எனும்போது தொழிற்நுட்ப வளர்ச்சி ஆச்சிரியப்பட வைக்கிறது. இருப்பினும், ஒருபக்கம் காரின் சார்ஜ் மீதும் ஒரு கண் இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 17:46 [IST]
English summary
Heavy snowfall in himachal pradesh tata curvv ev driver makes tea by car charge
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X