புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் காரை அதன் உரிமையாளர் கழுதையை வைத்து இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் இந்திய மார்க்கெட்டில் கால் பதித்தது. கடந்த ஜூன் மாத கடைசியில், ஹெக்டர் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனம் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார் ஹெக்டர்தான். இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் கார் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமை எம்ஜி ஹெக்டர் காரையே சேரும். இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளுடன் எம்ஜி ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

மேலும் ஹெக்டர் காருக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டர் கார்களை எம்ஜி மோட்டார் விற்பனை செய்துள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இதுதவிர 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எம்ஜி ஹெக்டர் காருக்கு முன்பதிவு செய்து விட்டு காத்து கொண்டுள்ளனர். அதிகப்படியான புக்கிங் காரணமாக, ஒரு சில இடங்களில் எம்ஜி ஹெக்டர் காருக்கு காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீள்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஹெக்டர்தான் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார்.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

ஆனால் அதை பொருட்படுத்தாமல், வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பு, எம்ஜி மோட்டார் நிறுவனத்தை அவர்கள் எவ்வளவு நம்புகின்றனர் என்பதை காட்டுகிறது. அதற்கு ஏற்ப எம்ஜி மோட்டார் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் தற்போது வாடிக்கையாளர் ஒருவரால் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

ராஜஸ்தானை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் எம்ஜி ஹெக்டர் காரை வாங்கியுள்ளார். ஆனால் அந்த காரின் கிளட்ச்சில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னையை சரி செய்வதற்கு எம்ஜி டீலர்ஷிப் அவருக்கு உதவி செய்யவில்லை என தெரிகிறது. மேலும் அவரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

எனவே அந்த வாடிக்கையாளர் தனது ஹெக்டர் காரை எம்ஜி டீலர்ஷிப்பிற்கு முன்பாக ஓட்டி சென்றார். அங்கு தனது காரின் முன்பகுதியில் கழுதையை கட்டி, அது தனது காரை இழுக்க செய்வது போல் செய்தார். மேலும் இது கழுதை வாகனம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களையும் தனது காரை சுற்றி அவர் கட்டியிருந்தார்.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி பரவி வருகிறது. அருண் பன்வார் என்ற யூ-டியூப் சேனலில்தான் இந்த வீடியோ முதலில் பகிரப்பட்டது. அதன்பின்பு சமூக வலை தளங்களிலும் வைரலாக தொடங்கியது. எம்ஜி ஹெக்டர் கார் உரிமையாளரின் வித்தியாசமான போராட்டத்தை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

இந்த வீடியோ கடந்த டிசம்பர் 3ம் தேதியன்று அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இதன்பின் எம்ஜி ஹெக்டர் கிளப் இந்தியா என்ற பேஸ்புக் குழுவின் உறுப்பினர் ஹேம்கந்த் ஜெயின் என்பவரால், எம்ஜி இந்தியா நிறுவனத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. எனவே எம்ஜி இந்தியா நிறுவனம் இதற்கு பதில் அளித்துள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

சம்பந்தப்பட்ட ஹெக்டர் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுப்பதாக எம்ஜி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எம்ஜி இந்தியா நிறுவனம் வழங்கியுள்ள பதிலை கீழே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்.

புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனத்தின் முதல் கார் என்ற போதிலும், ஹெக்டர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அதன் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Image Courtesy: Arun Panwar/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2019, 13:56 [IST]
English summary
Hector SUV Gets Pulled By Donkey, MG India Initiates Action Against Customer: Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+