வாகன ஓட்டிகளிடம் கடும் அபராதம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன உருக்கமான காரணங்கள்

வாகன ஓட்டிகளிடம் கடும் அபராதம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், சுமார் 1.5 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். மேலும் 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். எனவே இங்கு சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

இதன் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை தற்போது பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்திலும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. முன்பு இருந்ததை விட அபராத தொகைகள் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் இனி நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு நீங்கள் வழி விட தவறினாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

அதே சமயம் வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி சென்றால், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே போன்று லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது மற்றும் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது என அனைத்து விதமான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதமும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகைகள் அமலுக்கு வந்துள்ளன. அன்று முதல் இதுகுறித்த செய்திகள் அதிகம் வெளி வந்து கொண்டுள்ளன. அபராத தொகைகளை உயர்த்தியிருப்பதற்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது. அதே சமயம் எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. இது மிக கடுமையான நடவடிக்கை என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

சில சமயங்களில் வாகனத்தின் விலையை விட அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. எனவே அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கை அவசியமான ஒன்றுதான். எனினும் அபராத தொகையை கொஞ்சம் குறைக்கலாம் என பெரும்பாலானோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

இப்படிப்பட்ட சூழலில், அபராத தொகைகளை மிகவும் கடுமையாக உயர்த்தியிருப்பது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், அபராத தொகைகளை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

ஒரு சில நாடுகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்கள். அங்கு சாலைகள் பாதுகாப்பானவையாக உள்ளன. அதேபோல் இந்தியாவின் சாலைகளும் பாதுகாப்பானவையாக மாறி வருகின்றன. இதற்காக மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை'' என்றார்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சட்டை செய்வதில்லை என்பதாலும் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீது வாகன ஓட்டிகளுக்கு பயமோ, மரியாதையோ இல்லாத காரணத்தாலும் இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் மிகவும் அவசியமானதுதான் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''சாலை விபத்துக்களால் ஒருவரை இழந்த குடும்பத்தினரிடம் அதன் வலி மற்றும் வேதனையை பற்றி கேட்டு பாருங்கள். சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களில் 65 சதவீதம் பேர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்களின் குடும்பத்தினர் இதை எவ்வாறு உணர்கிறார்கள்? என கேட்டு பாருங்கள். நானும் கூட விபத்தால் பாதிக்கப்பட்டவன்தான்'' என்றார்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

சில சமயங்களில் வாகனத்தின் விலையை விட அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறதே? என்ற கேள்வியும் நிதின் கட்கரியிடம் முன்வைக்கப்பட்டது. பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக ஒட்டுமொத்தமாக சேர்த்து அபராதம் விதிக்கப்படுவதால் அத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கலாம் என அதற்கு நிதின் கட்கரி பதிலளித்தார்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

இதுகுறித்து நிதின் கட்கரி மேலும் கூறுகையில், ''முதல்வராக இருந்தாலும், மத்திய அமைச்சராக இருந்தாலும், பத்திரிக்கையாளராக இருந்தாலும், நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறினால் அபராதம் செலுத்திதான் ஆக வேண்டும். இதில் எவ்விதமான வேறுபாடும் கிடையாது'' என்றார். அத்துடன் வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை ஒன்றையும் நிதின் கட்கரி முன் வைத்துள்ளார்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் வாகனம் தொடர்பான மற்ற முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் டிஜிலாக்கர் மற்றும் எம்பரிவாகன் போன்ற டிஜிட்டல் பிளாட்பார்ம்களில், எலெக்ட்ரானிக் வடிவில் வைத்து வாகன ஓட்டிகள் பராமரிக்கலாம் என நிதின் கட்கரி கேட்டு கொண்டுள்ளார். போக்குவரத்து போலீசார் ஆவணங்களை கேட்கும் பட்சத்தில், இதை உங்களால் காட்டி கொள்ள முடியும்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

அபராதங்களை மிகவும் கடுமையாக உயர்த்தியிருப்பதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. ''இங்கு சாலைகள் முதலில் தரமாக இல்லை. சாலைகளை தரமாக கட்டமைத்து விட்டு, அதன்பிறகு இதுபோன்று அபராதம் வசூலிக்கலாம்'' எனவும் பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

எனவே நாட்டின் ஒரு சில பகுதிகளில் சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதே? என அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிதின் கட்கரி, ''சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அதிக அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

அதேபோல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அதிக அபராதம் விதிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் புதிய சட்டத்தில் உள்ளன'' என்றார். ஆக மொத்தத்தில் மிக கடுமையான போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஆதரவாகவும், அதில் உள்ள நியாயங்கள் குறித்தும் நிதின் கட்கரி தற்போது பேசியுள்ளார்.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

அத்துடன் சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காகவே போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நிதின் கட்கரியின் இந்த அதிரடி பேட்டியை வைத்து பார்க்கையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதங்கள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு... அபராத தொகைகள் குறைக்கப்படுமா? அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி பேட்டி

எனவே எதிர்ப்பு காரணமாக அபராத தொகைகள் குறைக்கப்பட்டு விடும் என்று எண்ணாமல், விதிகளை இனி நீங்கள் முறையாக பின்பற்ற தொடங்குவதுதான் நல்லது. இல்லாவிட்டால் வட்டிக்கு கடன் வாங்கி அபராத தொகையை செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம்.

Article Published On: Monday, September 9, 2019, 16:54 [IST]
English summary
Hefty Fines For Traffic Violations Aim At Curbing Road Accidents: Minister Nitin Gadkari. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+