ஹெலிகாப்டர் பைலட்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! ஒரு மாசம் மட்டும் வேலைக்கு போனா போதும்! செட்டில் ஆயிரலாம்!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறையினர் பலர் சொந்தமாக ஹெலிகாப்டர் (Helicopter) வைத்துள்ளனர். பண பலம் படைத்தவர்கள், சொந்தமாக ஹெலிகாப்டர்களை வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வெகு விரைவான போக்குவரத்துதான் இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

ஹெலிகாப்டர்கள் இருக்கிறது என்றால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை இல்லாமல் பயணம் செய்ய முடியும். அத்துடன் விமானங்களை (Airplane) போன்று, ஹெலிகாப்டர்களை டேக் ஆஃப் (Take Off) செய்வதற்கும், லேண்டிங் (Landing) செய்வதற்கும் ரன்வே தேவை இல்லை. கிட்டத்தட்ட எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஹெலிகாப்டர்களை டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்ய முடியும். இதன் காரணமாகவும் விமானங்களை விட, ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு செல்வந்தர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

ஹெலிகாப்டர் பைலட்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! ஒரு மாசம் மட்டும் வேலைக்கு போனா போதும்! செட்டில் ஆயிரலாம்!

ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு அதிக செலவு ஆகும் என்பதை போல், அவற்றை இயக்குவதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஹெலிகாப்டர்களை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு தோராயமாக எவ்வளவு செலவு ஆகும்? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். பைலட்களின் சம்பளம் மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டு காரணிகள்தான், ஹெலிகாப்டர்களை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு ஆகும் செலவை தீர்மானிப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.

ஹெலிகாப்டர் பைலட்களின் சம்பளம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஏன் ஒரு நாட்டுக்கு உள்ளேயே கூட இடங்களை பொறுத்து, அவர்களின் சம்பளத்தில் மாறுபாடுகள் உள்ளன. அத்துடன் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றையும் பொறுத்தும், ஹெலிகாப்டர் பைலட்களின் சம்பளம் மாறுபடுகிறது. எனவே பைலட்களின் சம்பளத்தை தோராயமாகதான் கணக்கிட முடியும். நாம் இங்கே அமெரிக்காவை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த பைலட்களுக்கு சம்பளம் குறைவு.

அவர்கள் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மட்டுமே சம்பளமாக பெறுகின்றனர். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 42 லட்ச ரூபாய். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்த பைலட்கள் ஒரு ஆண்டுக்கு 1.80 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்குகின்றனர். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1.50 கோடி ரூபாய். எனவே அமெரிக்காவில் சராசரியாக ஒரு ஹெலிகாப்டர் பைலட்டிற்கு ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 83 லட்ச ரூபாய். இதற்கு அடுத்தபடியாக எரிபொருள் செலவை கணக்கிட வேண்டியுள்ளது. இதுவும் கூட ஹெலிகாப்டரின் வகையை பொறுத்து மாறுபடும். பிஸ்டன்களை கொண்ட சிறிய ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரம் பறப்பதற்கு, 6 முதல் 16 கேலன் எரிபொருளை நுகரும். அதே நேரத்தில் டர்பைன்களை கொண்ட பெரிய ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரம் பறப்பதற்கு 20 கேலன் எரிபொருளை பயன்படுத்தும்.

ஒரு மணி நேரம் பறப்பதற்கு 100 கேலன் எரிபொருளை குடிக்கும் ஹெலிகாப்டர்களும் கூட இருக்கின்றன. ஒரு கேலன் என்பது 3.785 லிட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது தோராயமாக 4 லிட்டர்கள். நாம் கார்களில் பயன்படுத்தும் வழக்கமான எரிபொருளும், ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தும் எரிபொருளும் வெவ்வேறானவை. கார்களில் பயன்படுத்தும் எரிபொருளை விட, ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை மிகவும் அதிகம் ஆகும்.

இவை மட்டுமின்றி, ஹெலிகாப்டரின் அளவை பொறுத்தும், இயக்குவதற்கான செலவு மாறுபடும். இந்த காரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், ஹெலிகாப்டரை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்பதை தீர்மானிக்கின்றன. அளவில் சிறிய ராபின்சன் ஆர்-22 (Robinson R-22) ஹெலிகாப்டரை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 164 அமெரிக்க டாலர்கள் செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் ரூபாய்.

அதே நேரத்தில் அளவில் பெரிய ஏர்பஸ் ஹெச்155 (Airbus H155) ஹெலிகாப்டரை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 1,593 அமெரிக்க டாலர்கள் செலவு ஆகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1.30 லட்ச ரூபாய். இதில், ராபின்சன் ஆர்-22 ஹெலிகாப்டரானது, 2 சீட்டர் மாடல் ஆகும். மறுபக்கம் ஏர்பஸ் ஹெச்155 ஹெலிகாப்டரில், 15 பேர் வரை பயணம் செய்ய முடியும். எனவே ஒரு மணி நேரத்திற்கு இயக்க ஆகும் செலவு என்பது ஒவ்வொரு ஹெலிகாப்டரையும் பொறுத்து மாறுபடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 17, 2022, 11:59 [IST]
English summary
Helicopter operating cost per hour
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+