திருநெல்வேலி-ல வெள்ளம்ன்னு தெரிஞ்சதும் உடனே பறந்து வந்த ஹெலிகாப்டர்! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?
கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற தற்போது ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டரில் உள்ள அம்சங்கள் என்னென்ன இந்த ஹெலிகாப்டரை ஏன் வெள்ள அபாய பிரச்சனைக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவு மழை பொழிவு இருந்தது. அதிகபட்சமாக 96 சென்டிமீட்டர் வரை மழை பெய்தது. இதனால் திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் மழை நீர் புகுந்து ஊரே வெள்ளைக்காடாக மாறியது. பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பலர் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பேரிடர் மீட்பு குழு முன்னதாகவே திட்டமிடப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிக்கு கொண்டுவரப்பட்ட நிலையில். எதிர்பாராத அளவு அதிக பாதிப்பு ஏற்பட்டதால் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் தற்போது மீட்பு பணியில் இறங்கியுள்ள நிலையில் இந்திய கடற்படை பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள் தான் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த மீட்பு பணியில் உள்ள பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் குறித்த வீடியோக்கள் வெளியான போது நமக்கு அது இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் என தெளிவாக தெரிந்தது. இந்திய கடற்படையில் உள்ள ஏஎல்எச் சேத்தக் ஹெலிகாப்டர்கள் தான் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டரில் உள்ள அம்சங்கள் என்ன இந்த ஹெலிகாப்டர்கள் ஏன் குறிப்பாக மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற காரணம் இருக்கிறது.

இந்த ஹெலிகாப்டருக்கு ஏஎல்எச் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் அதாவது குறைந்த எடை கொண்ட ஹெலிகாப்டராக இது இருக்கிறது0 இந்த ஹெலிகாப்டரை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இது பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டராக உள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். சீட்டுகளை அகற்றி விட்டால் அதிக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். சுமார் இரண்டு டன் எடை அளவிலான சரக்குகளை இந்த ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்ல முடியும். கடற்படையிலும் இந்திய ராணுவத்திலும் இந்த ஹெலிகாப்டர்களை சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது ஆயுதங்களை கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளுக்காக இதை பயன்படுத்துவார்கள்.

தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கி செல்ல இந்த ரக ஹெலிகாப்டர் தான் சிறப்பானது என்பதால் இந்த ஹெலிகாப்டர்கள் தற்போது மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்திய கடற்படையிடம் ஹெலிகாப்டர் சுமார் 350 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில் சில ஹெலிகாப்டர்கள் தான் தற்போது மீட்பு பணியில் இறங்கியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இந்தியா இந்த ஹெலிகாப்டர்களை தயார் செய்து அனுப்புகிறது.நமிபியா போன்ற நாடுகளில் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் பொருட்களை எடுத்துச் செல்லுதல், காயமடைந்த நபர்களை மீட்டுக் கொண்டு வருதல், தேடுதல் மற்றும் மீட்பு பணி, ஏரியல் சர்வே மற்றும் பேட்ரோல் பணி, அவசர கால மருத்துவ தேவை உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு முறை டிரில் செய்யப்படுவதால் இதில் எந்த விதமான பிரச்சினையும் எப்பொழுதும் ஏற்படாது. இதனால் இந்த ஹெலிகாப்டர்கள் வெள்ள அபாய மீட்டுப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ராணுவம் என்பது இந்திய மக்களை பாதுகாக்க தான் வெளியில் இருந்து வரும் பாதுகாப்பு பணிக்காக அவர்கள் முக்கியமான பணி இருந்தாலும் உள்நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது அவர்களின் உதவி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஹெலிகாப்டர் வந்து பல்வேறு மக்களை காப்பாற்றியுள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









