பைக்குல போகும் போது குழந்தைகளும் ஹெல்மெட் போடனுமா? ஐகோர்ட் சொன்ன பரபரப்பான அறிவுரை!

பைக்கில் குழந்தைகளை அழைத்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வருமாறு கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது என்ன குழந்தைகளை அழைத்து செல்லும் புதி விதிமுறை என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி விதி எண் 138(7) 2022ம் ஆண்டு வந்த சட்பப்டி வாகனங்களில் செல்பவர்கள் குறைந்தகளுடன் சென்றால் குறைந்த வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். குழந்தைகள் பின்சீட்டில் அமர வைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம், முன்பக்கம் அமர வைக்கும் அளவிற்கு சிறிய குழந்தையாக இருந்தால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு விஷயங்களும் கட்டாயம் என சொல்கிறது.

Helmet And Safety Harness For Children Riding

ஆனால் இந்த சட்டம் இந்தியாவில் பல இடங்களில் அமலில் இல்லை இது மட்டமாக மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ஆச்சாரியா பாத் என்பவர் குழந்தைகளுக்கான தனி ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை கட்டாயமாக்க வேண்டும். 9 மாதங்களுக்கு அதிகமான குழந்தைகளுக்கு இதை கட்டாயமாக்கி சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் விபூபக்ரூ மற்றும் பூனாச்சா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு, ஹெல்மெட், சீட் பெல்ட் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அரசு விழிப்புணர்வு செய்து வருவதாக தெரிவித்தனர். குழந்தைகளுக்கான சீட் பெல்ட் எதுவும் பயன்பாட்டில் இல்லை என தெரிவித்தனர்.

Helmet And Safety Harness For Children Riding

மேலும் அம்மாநில ஏடிஜிபி மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் ஆகியோர் ஹெல்மெட் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளுக்கான ஹெல்மெட் தயாரிப்பு தற்போது ஆய்வில்தான் இருக்கிறது என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் மத்திய மோட்டார் வாகனத்தின் உள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை உடனடியாக மாநில அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் கர்நாடக மாநிலத்தில் இனி குழந்தைகளுடன் பைக்குகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வழக்கு நீதிபதிகள் விபூபக்ரூ மற்றும் பூனாச்சா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு, ஹெல்மெட், சீட் பெல்ட் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அரசு விழிப்புணர்வு செய்து வருவதாக தெரிவித்தனர். குழந்தைகளுக்கான சீட் பெல்ட் எதுவும் பயன்பாட்டில் இல்லை என தெரிவித்தனர்.

Helmet And Safety Harness For Children Riding

மேலும் அம்மாநில ஏடிஜிபி மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் ஆகியோர் ஹெல்மெட் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளுக்கான ஹெல்மெட் தயாரிப்பு தற்போது ஆய்வில்தான் இருக்கிறது என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் மத்திய மோட்டார் வாகனத்தின் உள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை உடனடியாக மாநில அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் கர்நாடக மாநிலத்தில் இனி குழந்தைகளுடன் பைக்குகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குழந்தைகள் வாகனங்களில் பயணிக்கும் போது இப்படியாக மோட்டார் வாகன சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை.இதை பின்பற்றினால் இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்கள் விபத்தில் சிக்குவது குறையும். இது எந்த அளவிற்கு நடைமுறைக்கு வருகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 21:15 [IST]
English summary
Helmet and safety harness for children riding speed limit rule
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X