ஹெல்மெட் உடன் வரும் கார் சீட்! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்குதா?

பொதுவாக காரில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்து பார்த்திருப்போம். இது சில நேரங்களில் டெக்னிக்கல் பிரச்சனையின் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் ஹெல்மெட் ஏர் பேக் உடன் வாகனத்தை தயாரித்துள்ளது. இது குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

பொதுவாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகனங்களில் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய யுத்திகள் எல்லாம் தங்கள் வாகனங்களில் பொருத்தி அதை அப்டேட் செய்து வருகின்றனர். சீனாவை சேர்ந்த ஹவா என்ற நிறுவனம் தற்போது கார்களை தயாரித்து வருகிறது இந்நிறுவனம் தனது காரில் அதிக பாதுகாப்பு அம்சத்தை உட்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் ஏர் பேக்கை கார் சீட்டிலையே வைத்து வெளியிட்டுள்ளது இது போன்ற பாதுகாப்பு வம்சம் இதுவரை வேறு எந்த காரிலும் இருந்ததில்லை.

Helmet Car Seat

இது குறித்து வெளியான தகவலின் படி அவாயின் நிறுவனம் லக்ஸ் வி9 என்ற காரை உருவாக்கி வருகிறது இது ஒரு எலக்ட்ரிக் எம்பிவி ரக காராகும் இந்த காரில் தான் டிரைவர் சீட்டுக்கு ஹெல்மெட் ஏர் பேக் சிஸ்டத்தை உட்பகுதியுள்ளது. இந்த கார் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் பாதியில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வித அதிகாரப்பூர்வமாக நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த தொழில்நுட்பம் குறித்த முக்கியமான அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஹெல்மெட் ஏர் பக் காரின் சீட்டிலேயே பொருத்தப்பட்டுள்ளது விபத்து நடக்கும் நேரத்தில் டிரைவரின் தலைப்பகுதியை பாதுகாக்க இந்த ஏர்பேக் தானாக விரிவடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுப்பகுதியில் உள்ள ஏர்பகங்கள் எப்பொழுது வெளியே வருகிறதோ அதேபோல இந்த ஏர் பார்க்கும் வெளியே வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இதனால் டிரைவரின் தலைப்பகுதி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறது தலை என்றால் உச்சந்தலையில் இருந்து கழுத்து பகுதி வரை பாதுகாப்பை வழங்குகிறது இதனால் விபத்து நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவது வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காருக்கான சீட்டை சீனாவை சேர்ந்த யான்ஃபென் என்ற ஆட்டோமொபைல் உட்புற கட்டமைப்பு செய்யும் நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்நிறுவனம் உலகில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இந்நிறுவனம் போக்ஸ்வாகன் பிஎம்டபிள்யூ டொயோட்டோ ஜெனரல் மோட்டார்ஸ் பி ஒய் டி ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து காரின் உட்புற கட்டமைப்பை உருவாக்கி உள்ளது இந்நிறுவனம் தான் தற்போது இப்படியான விஷயத்தை உருவாக்கி அதை கார்களில் பொருத்த திட்டமிட்டு ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு இதை வடிவமைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து : கார்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது நல்ல விஷயம் தான் இது. மக்கள் மத்தியில் பாதுகாப்பான பயணத்தை கார் வழங்கும் என்ற நம்பிக்கையை பெற்று தரும். இந்த கார் இந்தியாவிற்கு வருவதற்கான சாத்தியம் இல்லை. ஆனால் இந்த தொழிற்நுட்பம் இந்தியாவிற்கு வர வாய்ப்புகள் உள்ளது. டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் வருங்காலங்களில் கார்களில் இந்த தொழிற்நுட்பத்தை புகுத்த வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 26, 2025, 10:45 [IST]
English summary
Helmet car seat huawei launches world first helmet airbag car
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+