தமிழகத்தில் இவர்கள் மட்டும் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கலாம்! இப்படி ஒரு ரூல்ஸ் இருப்பதே யாருக்கும் தெரியாது!
இந்தியாவில் டூவீலரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதனால் ஆங்காங்கே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் டூவீலர் வாகன ஓட்டிகள் மீது அபராதம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் டூவீலரில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? நீண்ட நாள் நாட்களாக இந்த விதிவிலக்கு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
சாலையில் டூவீலரில் பயணிக்கும் போது தலைக்கவசம் என்பது மிகவும் அவசியம். இது உங்கள் உயிரையே விபத்தில் சிக்கும் போது காக்கும் அளவுக்கு பாதுகாப்பான விஷயமாகும். இதனால் இந்தியா முழுவதும் டூவீலர் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் இந்த ஹெல்மெட் சட்டம் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் டூவீலர் ஒட்டும்போது ஹெல்மெட் அணிய தேவை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் டூவீலர் ஓட்டும் போது சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலைப்பாகை என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. அவர்கள் வெளியில் செல்லும்போது தலைப்பாகை இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள். இப்படியாக தலைப்பாகை அணிந்திருக்கும் போது ஹெல்மெட் அணிவது என்பது முடியாத காரியமாக இருக்கும். இதனால் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் டூவீலர் ஓட்டும் போது அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தி அவர்களுக்கு அபராதம் இருக்க முடியாது. ஹெல்மெட் அணியும் கட்டாய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் தான் சீக்கியர்கள் அதிகம் இருக்கிறார்கள் தமிழகத்தில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு.
தமிழகத்தை பொறுத்தவரை மெய்வழி சபா மற்றும் மெய்வழி சாலை என்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களும் தலையில் தலைப்பாகையுடன் தான் எப்போதும் இருப்பார்கள். இவர்களின் நம்பிக்கை படியும் தலைப்பாகை அணிய வேண்டும் என்பதால் இதை அணிந்து கொண்டு ஹெல்மெட் அணிவது கடினம் என்பதால் இவர்களுக்கும் ஹெல்மெட் அணிவதில் இருந்து கட்டுப்பாடு சம்பந்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மெய்வழி மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணம் செய்ய சட்ட வழிமுறையே இருக்கிறது. இதற்கான அரசாணை ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தமிழகத்தில் மற்ற அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு தற்போது அமலில் இருக்கிறது.
மோட்டார் வாகன சட்டப்படி வாகனம் ஓட்டி செல்லும் நபர் மட்டும் அல்லாமல் வாகனத்தில் பின்னால் அணிந்து செல்லும் நபரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் சென்றால் குழந்தைக்கு நான்கு வயதுக்கு மேல் இருந்தால் அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறை தற்போது அமலில் இருக்கிறது.
அதையும் மீறி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் தொழில்நுட்பம் மூலம் கேமரா வைத்து கண்காணித்து விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் ஆங்காங்கே வாகன தணிக்கை நடந்து அதன் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூவீலரில் செல்லும்போது அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதுதான் வாகன ஓட்டிகளில் உயிருக்கு பாதுகாப்பான விஷயமாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. அதே நேரம் மெடிக்கல் கண்டிஷன் காரணமாக யாருக்காவது ஹெல்மெட் அணிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லலாம். ஆனால் அதற்கு போதுமான ஆதாரங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









